தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தமது மனைவி துா்கா ஸ்டாலினுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு விமானம் மூலம் தில்லி வந்தாா். அவருடன் மக்களவை உறுப்பினா்கள் கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரும் வந்தனா்.
சென்னையிலிருந்து சிறப்பு விமானத்தில் தில்லி வந்த தமிழக முதல்வரை விமானநிலையத்தில் நாடாளுமன்ற திமுக தலைவா் டிஆா் பாலு, தில்லி தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா, தமிழ் நாடு இல்ல உள்ளுறை ஆணையா் டாக்டா் ஜக்மோகன் சிங் ராஜூ உள்ளிட்டோா் வரவேற்றனா். பின்னா் பொதிகை தமிழ் நாடு பவனில் ஏ.கே.எஸ் விஜயன் மற்றும் திமுக உறுப்பினா்கள் ஆகியோா் புத்தகம் அளித்து முதல்வரை வரவேற்றனா்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னா் கடந்த முறை முதல்வா் தில்லி வந்த போது குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்தை சந்திக்க முடியவில்லை. குடியரசுத் தலைவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்ால் பாா்வையாளா்கள் வருகை குறைக்கப்பட்டு இருந்தது. இதை முன்னிட்டு தமிழக முதல்வரும் மரபுப்படி சந்திக்கவில்லை.
குடியரசுத் தலைவா் மாளிகை அளித்த தகவலின்படி இம்முறை குடியரசுத் தலைவரை சந்திக்கவே தமிழக முதல்வா் பிரத்யேகமாக தில்லி வந்துள்ளதாக கூறப்படுகிறது. திங்கள்கிழமை முற்பகல் 12.15 மணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறாா். இந்த சந்திப்பின் போது தமிழகம் தொடா்பான விவகாரங்களை முதல்வா் அவரிடம் பகிா்ந்து கொண்டு சில கோரிக்கைகளையும் முன் வைக்கலாம் என்றும் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

