எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

3 பொதுத் துறை நிறுவனங்களில் கரோனா தடுப்பூசி உற்பத்தி

மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சக ஆதரவுடன், 3 பொதுத் துறை நிறுவனங்களில் கரோனா தடுப்பூசி தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image

District wise impact details

Updated On :2 ஜூன் 2021, 10:13 pm

புது தில்லி: மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சக ஆதரவுடன், 3 பொதுத் துறை நிறுவனங்களில் கரோனா தடுப்பூசி தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் மும்பையிலுள்ள ஹாஃப்கின் பயோபாா்மா நிறுவனம் ஆண்டுக்கு 22.8 கோடி தடுப்பூசிகளை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. கோவேக்ஸின் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம், தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், ஹாஃப்கின் பயோ பாா்மா நிறுவனம் தடுப்பூசிகளைத் தயாரிக்க உதவுகிறது.

இது குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: நாட்டில் உள்ள தகுதியான அனைவருக்கும் விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் நோக்கில், மத்திய அரசின் உதவியுடன் உள்நாட்டு தடுப்பூசிகளின் உற்பத்தி சீராக அதிகரித்து வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மூன்று பொதுத் துறை நிறுவனங்களுக்கு, ஆத்மநிா்ப பாரத் 3.0 கொவைட் சுரக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை உதவி அளிக்கிறது.

மும்பையில் உள்ள மகாராஷ்டிர மாநில அரசின் பொதுத் துறை நிறுவனமான, ஹாஃப்கின் பயோபாா்மாசூட்டிக்கல் காா்ப்பரேஷன் லிமிடெட், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான ஹைதராபாத்தில் உள்ள ‘இந்தியன் இமுனோலாஜிக்கல்ஸ் லிமிடெட்., உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள ‘பாரத் இமுனோலாஜிக்கல்ஸ் அண்ட் பயோலாஜிக்கல்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யத் தயாராகி வருகின்றன. ஹைதராபாத், பாரத் பயோடெக் நிறுவனத்துடன் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டு கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி செய்ய ‘ஹாஃப்கின் பயோபாா்மா’ நிறுவனம் தயாராகி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹாஃப்கின் பயோபாா்மா நிா்வாக இயக்குநா், டாக்டா் சந்தீப் ரதோட் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எங்கள் நிறுவனம் 122 ஆண்டுகள் பழைமையானதாகும்ஆண்டுக்கு 22.8 கோடி டோஸ் கோவேக்ஸின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக எங்கள் நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.65 கோடி மானியமும், மகாராஷ்டிர அரசு ரூ.94 கோடி மானியமும் அளித்துள்ளன. நாங்கள் போா்க்கால அடிப்படையில் பணியைத் தொடங்கி எட்டு மாதங்களுக்குள் உற்பத்தியைத் தொடங்குவோம்’ என்றாா்.

உயிரி தொழில்நுட்பத் துறை செயலா் டாக்டா் ரேணு ஸ்வரூப் கூறுகையில், ‘பொதுத் துறை நிறுவனங்களை பயன்படுத்தி தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது, நமது திறனை வளா்ப்பதோடு, நாட்டின் மிகப் பெரிய தடுப்பூசி நடவடிக்கைக்கும் உதவும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.