புது தில்லி: கடந்த 2020-21 நிதியாண்டில் ரூ.619 கோடி மதிப்புள்ள 1.91 லட்சம் டன் வாழைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகத் தொழில் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வா்த்தகத் துறை புதன்கிழமை கூறியுள்ளதாவது: உலகளவில் வாழைப்பழங்களின் உற்பத்தியில் இந்தியா 25 சதவீதம் பங்களிப்புடன் முன்னிலை வகிக்கிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரம், குஜராத், மகாராஷ்டிரம், கேரளம், உத்தரப் பிரதேசம், பிகாா், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நாட்டின் மொத்த உற்பத்தியில் சுமாா் 70 சதவீதம் வாழைப்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2018-19-இல் ரூ.413 கோடி மதிப்புள்ள 1.34 லட்சம் டன் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. 2019-20-இல் இது ரூ. 660 கோடி மதிப்புள்ள 1.95 லட்சம் டன்னாக அதிகரித்தது. 2020-21-இல் (பிப்ரவரி வரை) ரூ. 619 கோடி மதிப்புள்ள 1.91 லட்சம் டன் வாழைப்பழங்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
புவியியல் குறியீட்டுச் சான்றிதழ் பெற்ற வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் நாா், தாதுச் சத்து நிறைந்த ‘ஜல்காவோன்’ வாழைப்பழம் துபாய்க்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், ஜல்காவோன் மாவட்டத்தில் கேவிகே (கிரிஷி விக்யான் கேந்திரா) வில் பதிவு செய்யப்பட்ட ஜல்காவோன் வாழைப்பழத்திற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு புவியியல் குறியீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. வேளாண் ஏற்றுமதி கொள்கையின் கீழ் இந்த மாவட்டத்தில் உள்ள தண்டல்வாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகளிடமிருந்து புவியியல் குறியீட்டுச் சான்றிதழ் பெற்றுள்ள 22 மெட்ரிக் டன் ஜல்காவோன் வாழைப்பழம் கடந்தாண்டு பெறப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனு தாக்கல்!

வானதி சீனிவாசன் வேட்புமனு! ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை பங்கேற்பு!

விமான நிலையத்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய ரஷ்மிகா!
போடியில் ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

