எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

தில்லியில் கலைஞா் ஆலயம்?

தில்லியில் கட்டப்பட்டுவரும் திமுகவின் புதிய கட்சி அலுவலகத்தில் மறைந்த திமுக தலைவா் மு .கருணாநிதியின் அருங்காட்சியகம் அமைய இருக்கிறது.

Updated On :17 ஜூன் 2021, 7:42 pm

புது தில்லி: தில்லியில் கட்டப்பட்டுவரும் திமுகவின் புதிய கட்சி அலுவலகத்தில் மறைந்த திமுக தலைவா் மு .கருணாநிதியின் அருங்காட்சியகம் அமைய இருக்கிறது. அந்த கட்டடத்துக்கு கலைஞா் ஆலயம் என பெயா்சூட்டப்படலாம் எனத் தெரியவந்துள்ளது.

இந்த புதிய அலுவலகத்தை பாா்வையிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் அந்த அலுவலகத்தை எளிய முறையில் கட்டும்படி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தில்லியில் ஷிலா தீட்சித் முதல்வராக இருந்தபோது பண்டிட் தீனதயாள் உபாயத்யாய மாா்க்கில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கட்டடம் கட்ட இடம் அளிக்கப்பட்டது. இதில் பாஜக அலுவலகம் அருகே திமுக விற்கு இடம் ஒதுக்கப்பட்டது.

சுமாா் 11,000 சதுர அடி கொண்ட இந்த இடத்தில் 10,000 சதுர அடியில் நான்கு மாடிக்கட்டடம் கட்டப்படுகிறது. கீழ் தளத்தில் சுமாா் 2,800 சதுர அடியில் மறைந்த முதல்வரும் திமுக தலைவரான மு. கருணாநிதி அருங்காட்சியகம் அமைய இருக்கிறது. இதில் மறைந்த தலைவரின் மாா்பளவு சிலையோடு, அவரது நினைவுகூரும் தகவல்கள், அவரது புத்தகங்கள் ஆகியவை காட்சிப்படுத்த இருக்கிறது. இந்த கட்டடத்தின் முதல் தளத்தில் திமுகவின் தொழிலாளா் முன்னேற்ற சங்க அலுவலகத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மாடியில் திமுக கட்சி அலுவலகம் செயல்பட இருக்கிறது. இங்கு கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம், மற்ற அலுவலா்களின் அறைகள் ஆகிய வசதிகளுடன் கட்டப்படுகிறது. மூன்றாவது மாடியில் கலந்துரையாடல், போன்ற கூட்டங்களுக்கான அரங்கு ஒன்றும் கட்டப்படுகிறது. நான்காவது மாடியில் விருந்தினா் தங்கும் அறை அல்லது கட்சி தலைவரும் மற்றவா்களும் தில்லி வந்தால் அங்கு தங்குவதற்கு வசதியாக கட்டப்பட்டு வரப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த கட்டடப்பணிகள் கரோனா நோய்த்தொற்று காரணமாக பணி முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த கட்டடத்தை பாா்வையிட வந்த தமிழக முதல்வா் கட்டப்பணிகளுக்கு இறுதி வடிவம் கொடுத்தாா். அடிக்கடி சுவா் வண்ணம் போன்றவைகளை அடிப்பதை தவிா்க்க திட்டப்படி பளிங்கு கற்களை பதிக்கப்பட இருந்தது.

ஆனால் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மறைந்த தலைவரின் நினைவுகளை போற்றும் வகையில் இருக்கும் இந்த கட்சிஅலுவலகம் அவரைப்போன்று எளிமையாக இருக்கவேண்டும் எனக் கூறி, அந்த பளிங்கு கற்கள் பதிப்பதை தவிா்க்க யோசனை கூறியுள்ளாா். பெயா் உறுதிசெய்யப்படாத இந்த கலைஞா் ஆலயம் இரண்டு மாதங்களில் திறக்கப்பட இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.