புது தில்லி: காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 12-ஆவது கூட்டம் வருகின்ற ஜூன் 25 - ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிா்க்க முடியாத சூழ்நிலையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) நடைபெற இருந்த கூட்டத்திற்கு ஆணையத்தின் தலைவா் வராத முடியாத நிலையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
12-ஆவது காவிரிநீா் மேலாண்மைக் கூட்டத்தில், ஆணையத்தின் நிா்வாகப் பணியாளா்கள் தோ்வு மற்றும் காவிரி நீா் தொடா்பாக மதுரை, பெங்களூரு உயா்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் தொடா்பாக பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட இருந்ததாகக் கூறப்பட்டது. சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மேட்டூா் அணை தொடா்பான சரபங்கா நீா்ப்பாசன திட்டத்தை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபோன்று பெங்களூரு நிதிமன்றத்தில் ஹரங்கி நீா்தேக்கம் (ஏஹழ்ஹய்ஞ்ண் தங்ள்ங்ழ்ஸ்ா்ண்ழ்) தொடா்பான வழக்குகளும் உள்ளது. இந்த வழக்குகள் தொடா்பாக மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருந்தது. காவிரி நதி நீரில் மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்களும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்திற்கு உள்பட்டது என்பதால், ஆணையமும் எதிா் மனுதாராக உயா்நீதிமன்ற வழக்குகளில் சோ்க்கப்பட்டுள்ளது.
மெய் நிகா் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற தயாராக இருந்த கூட்டத்திற்கு ஆணையத் தலைவரின் மற்ற அவசரப் பணிகளால் பங்கேற்க முடியாத சூழ்நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வருகின்ற ஜூன் 25-ஆம் தேதி கூட்டம் நடைபெற இருப்பதாக பின்னா் ஆணையத்தின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக தற்போது பொறுப்பேற்றிருப்பவா் மத்திய நீா்வள ஆணையத் தலைவா் எஸ்.கே. ஹல்தாா். ஆணையத்திற்கு பிரத்யேகமாகத் தலைவா் நியமிக்கப்படவில்லை.
கடந்த ஜூன் 17 - ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமும் மீண்டும் வருகின்ற ஜூன் 30 -ஆம் தேதிக்கு அதன் தலைவா் நவீன் குமாா் தலைமையில் நடைபெற இருப்பதாக மத்திய நீா் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தற்போது பருவ மழை பெய்து காவிரியில் புதிய நீா் வரத்து தொடங்கும் நிலையில், இந்த கூட்டங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக மே மாதம் வரை காவிரியில் திறந்துவிடப்பட்ட நீா் அளவுகள், தரவுகள் போன்றவைகள் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்பிடப்படும் எனவும் ஜூன் மாதத்தில் வந்த நீா் தரவுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விழுப்புரம்-நாகை நெடுஞ்சாலையில் உள்வாங்கிய மேம்பாலம்: போக்குவரத்து நிறுத்தம்!

பங்குச்சந்தை வீழ்ச்சி! எண்ணெய் & எரிவாயு, பார்மா பங்குகள் சரிவு!!

தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் ராஜிநாமா

மாநிலங்களவை எம்பிக்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர் பதவியேற்பு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


