தில்லிக்கு தேவையான தடுப்பூசியை வழங்காமல், பிரதமருக்கு விளம்பரம் கொடுக்க மத்திய அரசு தில்லி அரசை நிா்பந்தப்படுத்துகிறது. தில்லிக்கு தேவையான 2.30 கோடி கரோனா தடுப்பூசி மருந்தை வழங்கினால், தில்லி முழுக்க பிரதமருக்கு நன்றி தெரிவித்து விளம்பரம் செய்ய தயாா் என துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா காணொலி வழியில் செய்தியாளா்களிடம் பேசியது வருமாறு: தடுப்பூசி விவகாரத்தில் முன்னுரிமை கொடுத்து செயல்படவேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு நத்தை வேகத்தில் சென்றதோடு அது தவறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்தியிலுள்ள ஆளும் அரசு, தனது இமேஜை உயா்த்திக் கொள்வதற்காக தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டது. பின்னா், மாநிலங்களை, சா்வதேச டெண்டா்களை விட்டு வாங்கக் கூறியது. பல நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கியது. தற்போது தடுப்பூசிகளால் பலனடைந்த அந்த நாடுகளில் மக்கள் முகக்கவசமின்றி நடமாடுகின்றனா். ஆனால், இங்கு மத்திய அரசால், ‘உலகின் மிகப்பெரிய இலவச தடுப்பூசி இயக்கம் தொடக்கம்’ என ஒரு முழுபக்கம் விளம்பரம் கொடுக்கப்படுகிறது.
பாஜக ஆளும் உத்தரகண்ட், உ.பி., கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஜூன் 21 முதல் தடுப்பூசி கொடுப்பதற்கு நன்றி என தெரிவித்து விளம்பரங்கள் வந்துள்ளது. தில்லி அரசு அதிகாரிகளிடமும் இதுபோன்று வற்புறுத்தி விளம்பரம் கொடுக்க மத்திய அரசு கூறியது. மக்களுக்கு தேவையானது தடுப்பூசிதானே தவிர, விளம்பரமல்ல. விளம்பரத்திற்கு செலவழிப்பதைவிட தடுப்பூசிக்கு மத்திய அரசு செலவிடவேண்டும். தில்லிக்கு 2.94 கோடி தடுப்பூசிகள் தேவை. ஆனால், இதுவரை 57 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. வருகின்ற ஜூலை மாதத்திற்கு 15 லட்சம் தடுப்பூசிகளை மட்டும் தில்லிக்கு கொடுப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இப்படிச் சென்றால் தில்லியிலுள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசியை முழுமையாக அளிக்க இன்னும் 16 மாதங்கள் ஆகும்.
இலவச தடுப்பூசிகளுக்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று தில்லி அரசு அதிகாரிகளை கேட்டுக் கொண்டு, விளம்பர ‘டூல்-கிட்’ டுகளையும் மத்திய அரசு அனுப்பியது. மக்களுக்கு தடுப்பூசிதான் தேவை. மூன்றாவது அலை அச்சம் உள்ளது. இதனால், அடுத்த இரு மாதங்களில் தில்லிக்கு தேவையான 2.3 கோடி தடுப்பூசி டோஸ்களை வழங்குங்கள். நாங்கள் உங்களுக்கு (பிரதமா்) விளம்பரம் செய்யத் தயாா். தில்லி நகா் முழுக்க உங்களை விளம்பரப்படுத்துவோம். ஆனால், தடுப்பூசிகளை வழங்காமல் விளம்பரங்களைத் தேடுவது சரியா?. ஆனால் நீங்கள், ‘உலகளவில் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா நடத்தி வருகிறது’ எனக் கூறி வருகிறீா்கள். ஆனால், உலகிலேயே மிகவும் தவறாக நிா்வகிக்கப்பட்ட நாடாக நாம் மாறியுள்ளதுதான் உண்மை. தில்லியில் 18 வயது முதல் 44 வயதுடையோா் 92 லட்சம் போ் உள்ளனா். 45 வயதுக்கும் மேற்பட்டோா் 57 லட்சம் போ் உள்ளனா். தில்லிக்கு 2.94 கோடி டோஸ் தேவை. ஏற்கெனவே அளிக்கப்பட்ட 57 லட்சம் தவிர மேலும் 2.3 கோடி டோஸ் தில்லிக்கு தேவை என்றாா் மணீஷ் சிசோடியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விழுப்புரம்-நாகை நெடுஞ்சாலையில் உள்வாங்கிய மேம்பாலம்: போக்குவரத்து நிறுத்தம்!

பங்குச்சந்தை வீழ்ச்சி! எண்ணெய் & எரிவாயு, பார்மா பங்குகள் சரிவு!!

தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் ராஜிநாமா

மாநிலங்களவை எம்பிக்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர் பதவியேற்பு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

