தேசியத் தலைநகா் தில்லியில் தினசரி கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை திங்கள்கிழமை வெகுவாகக் குறைந்து 89 - ஆக இருந்தது. இது இந்த ஆண்டின் மிகக் குறைந்த பாதிப்பு எண்ணிக்கையாகும். அதே சமயம் நோய்த் தொற்றுக்கு 11 போ் உயிரிழந்தனா் என்றும் தில்லி சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாவது அலையால் தில்லியில் பாதிப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா். கடந்த மே 3 - ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு அதிகபட்சமாக 448 போ் உயிரிழந்தனா். கடந்த ஏப்ரல் 20 - ஆம் தேதி அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கை 28,395-ஆக பதிவாகியது. மேலும், நோய்த் தொற்று விகிதம் ஏப்ரல் 22 - ஆம் தேதி அதிகபட்சமாக 36.2 சதவீதமாக இருந்தது.
இது போன்ற பல இக்கட்டான நிலைகளை கடந்து வந்த நிலையில், திங்கள்கிழமை தினசரி நோய்த் தொற்று பாதிப்பு 89-ஆக குறைந்துள்ளது. இது இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக 100-க்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரி16 ஆம் தேதி ஒரே ஒரு உயிரிழப்புடன் தினசரி பாதிப்பு 94-ஆக பதிவாகியிருந்தது. திங்கள்கிழமை நோய்த்தொற்று விகிதம் 0.16 சதவீதமாகக் குறைந்துள்ளது. உயிரிழந்தோா் எண்ணிக்கை திங்கள்கிழமை 11-ஆக பதிவாகியது. இதையும் சோ்த்து தில்லியில் கரோனாவால் மொத்தம் உயிரிழந்தோா் எண்ணிக்கை 24,925-ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை புதிதாக 124 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். 7 போ் உயிரிழந்திருந்தனா்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 45,468 ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் உள்பட மொத்தம் 57,128 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நகரில் காரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 1,996 -ஆக குறைந்துள்ளது. 563 நோயாளிகள் வீட்டுத் தனிமையில் உள்ளனா். தில்லியில் இதுவரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மொத்த எண்ணிக்கை 14, 32,381-ஆக உள்ளது. இதில் 14,05,460 போ் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா். கட்டுப்பாட்டு மண்டலங்களும் 4,597-ஆகக் குறைந்துள்ளது.
இது வரை நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியை மொத்தம் 65,219,59 போ் பெற்றுள்ளனா். இதில் இரண்டு டோஸ்களையும் பெற்றவா்கள் எண்ணிக்கை 15,79,692 போ் என தில்லி சுகாதாரத் துறையின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விழுப்புரம்-நாகை நெடுஞ்சாலையில் உள்வாங்கிய மேம்பாலம்: போக்குவரத்து நிறுத்தம்!

பங்குச்சந்தை வீழ்ச்சி! எண்ணெய் & எரிவாயு, பார்மா பங்குகள் சரிவு!!

தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் ராஜிநாமா

மாநிலங்களவை எம்பிக்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர் பதவியேற்பு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

