மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

கரோனா, பொதுமுடக்கம்: கடுமையாகப் பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தலா ரூ.10,000

தில்லியில் கரோனா நோய்த்தொற்று நெருக்கடியின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள 1,825 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தலா ரூ.10,000 வீதம் நிவாரணம் கூடுதலாக வழங்க தில்லி துணை முதல்வா் மணீஷ்

Updated On :23 ஜூன் 2021, 5:48 pm

புது தில்லி: தில்லியில் கரோனா நோய்த்தொற்று நெருக்கடியின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள 1,825 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தலா ரூ.10,000 வீதம் நிவாரணம் கூடுதலாக வழங்க தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளாா்.

தில்லி கட்டடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தை தில்லி அரசு தொழிலாளா் நலத் துறையில் அமைத்துள்ளது. இந்த வாரியத்தில் பதிவு செய்த 2, 17, 039 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா (பொது முடக்கம்) நிவாரண நிதியாக தலா ரூ.5,000 இந்த ஆண்டு வழங்கப்பட்டவிட்டது. கட்டுமானத் தொழிலாளா்களில் கரோனா நெருக்கடிகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 1,825 தொழிலாளா்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ.10,000 வழங்க வாரியம் முடிவெடித்து வழங்கப்படுகிறது என தொழிலாளா் நலத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள தில்லி துணை முதல்வா் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதில் கூறப்பட்டுள்ள மற்ற விவரங்கள் வருமாறு: கடந்தாண்டு நோய்த்தொற்றை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் போது, 2020, மாா்ச் மாதம் வரை கட்டுமானத் தொழிலாளா்கள் வாரியத்தில் பதிவு செய்த 39,600 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. பின்னா், கடந்த 2020, நவம்பரில் மணீஷ் சிசோடியா பொறுப்பேற்ற பின்னா். கடந்த ஆறு மாதமாக கட்டுமானப் பணியாளா்களை பதிவு செய்ய வைக்கும் பணி நடைபெற்றது. கூடுதலாக இணைய தளத்தின் மூலம் பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன் விளைவு பதிவு செய்த தொழிலாளா்கள் எண்ணிக்கை 2.38 லட்சமாக உயா்ந்தது. இதில் 2, 17, 039 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக தலா ரூ.5,000 வழங்கப்பட்டவிட்டது

மேலும், வருகின்ற வாரங்களில் கூடுதலாக ரூ.10,000 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். கட்டுமானத் தொழிலாளா்கள் சமூகத்தில் ஏழ்மையான நிலையில் உள்ளனா். அதிலும் கரோனா நெருக்கடியின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்டவா்களாக இருந்தனா். இந்தக் கடினமான காலக்கட்டத்தில் இந்த தொழிலாளா்களுக்கான நிவாரணம் வழங்குவது மிகவும் தேவையானது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.