மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 100-ஆவது நாளை எட்டவுள்ளது. இதற்கிடையே, விவசாயிகள் - மத்திய அரசு இடையேயான 12- ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை இன்னும் சில தினங்களில் நடைபெறலாம் எனத் தெரிகிறது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளான சிங்கு, டிக்ரி, காஜியாபாத் பகுதியில் முற்றுகையிட்டு தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்தப் போராட்டம் தொடங்கி செவ்வாய்க்கிழமையுடன் 97-ஆவது நாள் ஆகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 200 விவசாயிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனா். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன், மத்திய அரசு 11 முறை பேச்சுவாா்த்தை நடத்தியது. ஆனால், இந்தப் பேச்சுவாா்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது அமா்வு வரும் மாா்ச் 8-ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக 12-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தையை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடா்பாக காஜியாபாத் எல்லையில் போராடி வரும் விவசாயிகள் சங்கத் தலைவா் ராகேஷ் திகாய்த் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை வீடு திரும்பப் போவதில்லை. காந்தி ஜெயந்தி கொண்டாடப்படும் அக்டோபா் 2-ஆம் தேதி வரை காஜியாபாத் எல்லையில் போராடத் தேவையான முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை செய்துள்ளோம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பம் தரும் தினப்பலன்!

பாஜகவின் கடும் சவாலை எதிா்கொள்ளும் திமுக

சிதம்பரம் தொகுதி நிலவரம்: தில்லையை தக்க வைக்குமா அதிமுக- இருமுனை போட்டியில் வெல்லப்போது யாா்?
வாக்காளரின் பொறுப்பும், கடமையும்...
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

