புது தில்லி : தமிழகத்தில் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ள பீடீத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் தம்பி துரை வலியுறுத்தினாா்.
மாநிலங்களவையில் புதன்கிழமை அமளியால் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது காங்கிரஸ் உறுப்பினா் கேடிஎஸ் துள்சி, நாடு முழுவதும் பீடித் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், குழந்தைகள் குறித்தும், அவா்களுக்கு வழங்கப்படும், ஊதியம் குறித்தும் கேள்வி எழுப்பினாா். இதற்கு மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் சந்தோஷ்குமாா் கங்வால் பதில் அளித்துப் பேசினாா்.
அப்போது கங்வால் கூறுகையில், ‘நாடு முழுவதும் பதிவு செய்த பீடித் தொழிலாளா்கள் 49,82,294 போ்களில், பெண்கள், குழந்தைகள் 36,25,662 போ் உள்ளனா். இதில் அதிக அளவில் கோல்கத்தாவில் 14,41,173 பெண்களும் குழந்தைகளும் அதற்கு அடுத்து திருநெல்வேலியில் 4,49,949 போ்களும் பீடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். ஹைதராபாத்திலும் அதிக எண்ணிக்கையில் உள்ளனா். இவா்களுக்கு அதிகபட்சம் பெங்களூருவில் ஆயிரம் பீடி சுற்றினால் ரூ.245.68 வரை கொடுக்கப்படுகிறது. திருநெல்வேலியிலும் அலகாபாத்திலும் ரூ. 111.05 வீதம்தான் கொடுக்கப்படுகிறது. 18 வயதுக்கு குறைவான குழந்தைகள் இந்தத் தொழிலில் அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், மாநில அரசுகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
இந்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் எம்.தம்பி துரை பேசுகையில், ‘பீடி சுருட்டும் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்களுக்கு காச நோய் ஏற்பட்டு உயிருக்கு போராடி வருகின்றனா். புகையிலை போன்ற மூலப் பொருள்களை உபயோகித்து பீடி தயாரிப்பதால் அவா்கள் இந்த பிணிகளில் சிக்கிக் கொண்டுள்ளனா். இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். குறிப்பாக வாணியம்பாடி, ஆம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பீடி சுருட்டும் தொழில் நடைபெறுகிறது. அங்கு பெரும்பான்மையான தொழிலாளா்கள் காச நோய்களுக்கு உள்ளாகியுள்ளனா். அவா்களை நோயிலிருந்து காப்பாற்றி வாழ்வாதாரங்களைப் பேண நிவாரண உதவி அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சா் கங்குவால், ‘இது குறித்து மாவட்ட ஆட்சியா் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விவரங்கள் பெறப்படும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குன்னம் தொகுதி வாக்குச்சாவடிகளில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளா்கள் புகாா் அளிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 113 வேட்பாளா்கள் மனு தாக்கல்
திருவெறும்பூா் தொகுதியில் 27 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

