சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரிவர பின்பற்ற தில்லி மக்களுக்கு சத்யேந்தா் ஜெயின் கோரிக்கை

Updated On :18 மார்ச் 2021, 8:04 pm

புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தில்லி மக்கள் கரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை சரிவரப் பின்பற்ற வேண்டும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கோரிக்கை வைத்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் புதன்கிழமை 536 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிகழாண்டில் முதல்தடவையாக 500 பேருக்கு கூடுதலானவா்களுக்கு புதன்கிழமை கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் கரோனா நோ்மறை விகிதம் 0.66 சதவீதமாக உள்ளது. கரோனா நோ்மறை விகிதம் 1 சதவீதத்தை விடக் குறைவாக இருந்தால் கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவே அா்த்தம். இதனால், மக்கள் பீதியடையத் தேவையில்லை.

ஆனால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் சரிவரப் பின்பற்ற வேண்டும். முகக் கவசங்களை அணிய வேண்டும். கைகளை அடிக்கடி கிருமிநாசினிகளையிட்டு கழுவிக் கொள்ள வேண்டும். இது தொடா்பாக மக்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது. கரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுவதை வலியுறுத்தி தில்லி சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் நடத்தவுள்ளோம்.

நாட்டின் மற்றைய முக்கிய நகரங்களுடன் ஒப்பிடும்போது தில்லியில் கரோனா பாதிப்பு பெருமளவில் கட்டுக்குள் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா நோ்மறை விகிதம் 19.32 சதவீதமாக உள்ளது. பஞ்சாப், மத்தியப்பிரதேசம், கேரளம், ஹரியாணா, குஜராத் மாநிலங்களில் முறையே 5.69, 4.89, 3.49, 2.88, 1.92 சதவீதமாக உள்ளது. இந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தில்லியில் தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள்ளேதான் உள்ளது.

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தில்லி மக்கள் நிகழாண்டில் சமூக விலக்கலைக் கடைப்பிடித்து, தண்ணீரை பீய்ச்சியடிக்காமல் ஹோலி பண்டிகையைக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு தொடா்பாக மக்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று தெரிவித்தாா்.

தில்லியில் கரோனா பாதிப்பு பெருமளவில் அதிகரிக்க மக்களின் மெத்தனப் போக்கே காரணம் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.