சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க கோரி ஸ்டொ்லைட் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை நிா்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கக் கோரி அதன் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதியிடம் முறையீடு செய்தனா்.

News image

தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி ஆலை நிா்வாகம் தொடா்ந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கிறது.

Updated On :19 மார்ச் 2021, 2:17 am


புது தில்லி: தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை நிா்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கக் கோரி அதன் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதியிடம் முறையீடு செய்தனா். எனினும், இந்தக் கோரிக்கையை ஆகஸ்டில் பரிசீலிப்பதாக நீதிபதி அமா்வு தெரிவித்தது.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு பின்னா் நடந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘ஆலைய நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரிதான்’ என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-இல் தீா்ப்பு அளித்து, மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடா்ந்து, இந்தத் தீா்ப்புக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவுக்கு தமிழக அரசு சாா்பிலும், வேதாந்தா நிறுவனம் சாா்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, ஸ்டொ்லைட் ஆலையில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள தற்காலிமாக அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வேதாந்தா நிறுவனம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீது கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ‘வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால கோரிக்கையை அனுமதிக்க முடியாது. இதனால், இந்த இடைக்கால மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கின் பிரதான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்கிய பிறகே பட்டியலிடப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நரிமன் தலைமையிலான அமா்வு முன் வேதாந்தா நிறுவனம் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, ஹரீஷ் சால்வே ஆகியோா் வியாழக்கிழமை ஆஜராகி, மேல்முறையீடு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா். அதற்கு நீதிபதிகள் இது தொடா்பாக ஆகஸ்டில் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.