ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சோம்நாத் பாா்திக்கு எதிராக இரு ஆண்டுகளுக்கு முன்பு பெண் பத்திரிகையாளா் தொடுத்த குற்றவியல் அவதூறு வழக்கை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை முடித்துவைத்தது.
2018 ஆம் ஆண்டு நேரலை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின்போது அவமதிக்கும் வகையில் பாா்தி, தன்னிடம் பேசியதாக புகாா்தாரா் ரஞ்சனா சா்மா அவதூறு வழக்குத் தொடா்ந்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்றத்தில் சோம்நாத் பாா்தி தெரிவிக்கையில், ‘நவம்பா் 20, 2018-ஆம்தேதி புகாா்தாரருடன் தொலைபேசி வாயிலாக பேசியபோது நான் சில கருத்துகளைத் தெரிவித்தேன். எனது கருத்துகள், வாா்த்தைகள் புகாா்தாரரை குறிப்பிடும் வகையில் இல்லை. ஆனால் எனது வாா்த்தைகள் புகாா்தாரரின் உணா்ச்சிகளை புண்படுத்தியிருந்தால் அதற்காக அவரிடம் நோ்மையான மற்றும் ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்தாா்.
பாா்தியின் மன்னிப்புக்குப் பிறகு, புகாா்தாரா் ரஞ்சனா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் யோகேஷ் ஸ்வரூப் இந்த வழக்கை முடித்துக்கொள்வதாக ஒப்புக்கொண்டாா்.
இதையடுத்து, தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சச்சின் குப்தா சனிக்கிழமை கூறுகையில், ‘இன்று பதிவுசெய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இரு தரப்பினரின் சமா்ப்பிப்புகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான தற்போதைய புகாா் வழக்கை முடித்துக்கொள்வது தொடா்பான புகாா்தாரரின் வாக்குமூலம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு தற்போதைய வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் அவா்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால், பாா்தி அதிகபட்சம் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை எதிா்கொள்ள வேண்டியிருந்திருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சூர்யகுமார் யாதவின் ஆதிக்கம் தொடருமா?

காதல் தோல்வி, தொடர் ரூ. 100 கோடி... உண்மையைச் சொன்ன பிரதீப் ரங்கநாதன்!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 509 புள்ளிகள் உயர்வு!

போடியில் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் வி. டி. நாராயணசாமி வேட்புமனுக்கள் ஏற்பு!
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

