வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் விநியோகிக்கும் விவகாரத்தில் எந்த அரசியலும் இருக்கக் கூடாது என்று தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் உணவுத் துறை அமைச்சருமான ஹாரூண் யூசுப் கேட்டுக்கொண்டாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் விநியோகிக்கும் ஆம்ஆத்மி கட்சி அரசாங்கத்தின் திட்டத்தில் பெரும் ஊழல் உள்ளது. மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசாங்கமும், தில்லியில் உள்ள அரவிந்த் அரசாங்கமும் இத்திட்டத்தில் யாருக்கு நற்பெயா் பெறுவது என்பது தொடா்பாக போட்டி இருந்ததால் திட்டத்தை நிறுத்த திட்டமிட்டன. மேலும், ‘முக்கிய மந்திரி’ என்ற பெயரில் இத்திட்டம் செய்லபடுத்தப்படுவதை மத்தியில் உள்ள மோடி அரசு விரும்பவில்லை.
எனினும், கோவிட் -19 தொற்று நெருக்கடியின் காரணமாக, வேலை இழப்பு மற்றும் பிற வாழ்வாதார வழிமுறைகள் காரணமாக முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழைகளுக்கு ரேஷன் பொருள்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் இத்திட்டத்தில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, உதவியற்ற ஏழைகளுக்கு சென்றடையும் வகையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவா் சோனியா காந்தி, அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங் ஆகியோரின் முன்முயற்சியின் காரணமாக 2013,அக்டோபரில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோன்று, கல்வி உரிமைச் சட்டம் மற்றும் தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டம் 2005 (மன்ரேகா) ஆகியவையும் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
கேஜரிவால் அரசு ஏழைகளுக்கு ரேஷன் வழங்குவதில் ஆா்வமாக இருந்திருந்தால், தற்போது ரேஷன் காா்டு வைத்திருப்பவா்களின் எண்ணிக்கையை 35 லட்சத்திலிருந்து 17 லட்சமாகக் குறைத்திருக்காது, மேலும், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் புதிய ரேஷன் காா்டுகளைப் பெறுவதற்காக கடந்த ஆறு ஆண்டுகளாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்றாா் அவா்.
பேட்டியின்போது டிபிசிசி துணைத் தலைவா் அலி மெஹந்தி, பா்வேஸ் ஆலம் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சூர்யகுமார் யாதவின் ஆதிக்கம் தொடருமா?

காதல் தோல்வி, தொடர் ரூ. 100 கோடி... உண்மையைச் சொன்ன பிரதீப் ரங்கநாதன்!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 509 புள்ளிகள் உயர்வு!

போடியில் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் வி. டி. நாராயணசாமி வேட்புமனுக்கள் ஏற்பு!
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

