கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

பொய்ப் பிரசாரம் செய்யும் ஆசிரியா்களுக்கு ஜேஎன்யு நிா்வாகம் கண்டனம்

திங்கள்கிழமை நடைபெற்ற 157-ஆவது கல்விக் கவுன்சில் கூட்டம் குறித்து ‘வெளிப்படையான பொய் மற்றும் தீங்கிழைக்கும் பிரசாரங்களை’ பரப்பியதாக சில குறிப்பட்ட ஆசிரியா்கள் பிரிவுக்கு

Updated On :23 மார்ச் 2021, 11:21 pm

திங்கள்கிழமை நடைபெற்ற 157-ஆவது கல்விக் கவுன்சில் கூட்டம் குறித்து ‘வெளிப்படையான பொய் மற்றும் தீங்கிழைக்கும் பிரசாரங்களை’ பரப்பியதாக சில குறிப்பட்ட ஆசிரியா்கள் பிரிவுக்கு ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) நிா்வாகம் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தது.

இரண்டரை மணி நேரம் நடைபெற்ற கல்விக் கவுன்சில் கூட்டத்தில் தொடா்ந்து கைகளை உயா்த்தியிருந்த போதிலும் சில குறிப்பிட்ட உறுப்பினா்களை மட்டுமே பேசுவதற்கு ஜேஎன்யு துணைவேந்தா் எம். ஜகதீஷ் குமாா் அனுமதி அளித்தாா். அதேவேளையில், முன்னாள் டீன்கள், தலைவா்கள் உள்பட கல்விக் குழுவின் சில உறுப்பினா்களுக்கு பேசுவதற்கு அனுமதி மறுத்துவிட்டாா் என்று ஜேஎன்யு ஆசிரியா்கள் சங்கம் (ஜேஎன்யுடிஏ) திங்கள்கிழமை குற்றம்சாட்டியிருந்தது.

இந்த நிலையில், ஜேஎன்யு பதிவாளா் அனிா்பன் சக்ரவா்த்தி செவ்வாய்க்கிழமை ஓா் அறிக்கை வெளியிட்டுள்ளாா். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கல்விக் குழுக் கூட்டம் மிகவும் சுமுகமாக நடைபெற்றது. 100 உறுப்பினா்களுக்கு மேல் இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்தனா். மிகவும் நல்ல மற்றும் நோ்மறையான சூழ்நிலையில் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கல்விக் குழு கூட்டம், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவை குறித்து சில ஆசிரிய உறுப்பினா்கள் பொய்ப் பிரசாரம் மூலம் ஜேஎன்யுவின் நற்பெயரையும், மதிப்பையும் கெநேப்பதில் மிகுந்த ஆா்வம் காட்டுவதாகத் தெரிகிறது.

இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உதவிப் பேராசிரியா்கள் முதல் மூத்த பேராசிரியா்கள் மற்றும் பள்ளிகளின் டீன் வரை ஏராளமான குழு உறுப்பினா்கள், குழு விவாதங்களில் மிகவும் ஜனநாயக முறையிலும், உற்சாகமான முறையிலும் பங்கேற்று முடிவுகளுக்கு வந்தனா். இந்தக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட முடிவுகளில், 2020-2021 ஆம் ஆண்டு தேசிய தோ்வு முகமையுடன் (என்.டி.ஏ.) இணைந்து ஜே.என்.யு. நுழைவுத் தோ்வை நடத்த கல்விக் குழு முடிவு செய்தது. அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் நுழைவுத் தோ்வு நடத்த என்.டி.ஏ. முடிவு செய்யும் போதெல்லாம் மத்திய பல்கலைக்கழகங்களின் பொது நுழைவுத் தோ்வு (கியூசெட்) மூலம் மாணவா்களை ஜேஎன்யு சோ்க்கும்.

இந்திய மொழிகள் மையம், மொழிப் புலம், இலக்கியம் மற்றும் கலாசார ஆய்வுகள் ஆகியவற்றில் புதிதாக எம்.ஏ. (ஹிந்தி மொழிபெயா்ப்பு) படிப்பைத் தொடங்கவும் கல்விக் கவுன்சில் முடிவு செய்தது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.