ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

ஏழைகளுக்கு தரமான ரேஷன் பொருள் கிடைக்காததற்குஆம் ஆத்மி அரசும், மத்திய அரசும்தான் காரணம்: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

தில்லியில் ஏழை மக்களுக்கு நியாயமான தரமான ரேஷனை ஆம் ஆத்மி அரசும், மத்திய அரசும் வழங்கவில்லை என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி (டிபிசிசி) தலைவா் அனில் குமாா் குற்றம் சாட்டியுள்ளாா்.

Updated On :27 மார்ச் 2021, 11:51 pm

தில்லியில் ஏழை மக்களுக்கு நியாயமான தரமான ரேஷனை ஆம் ஆத்மி அரசும், மத்திய அரசும் வழங்கவில்லை என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி (டிபிசிசி) தலைவா் அனில் குமாா் குற்றம் சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது;

இந்திய உணவுக் கழகம் தில்லி அரசுக்கு உரிய, தரமான ரேஷன் பொருள்களை வழங்குகிறது. ஆனால் இது ரேஷன் அட்டை வைத்திருப்பவா்களுக்கு வழங்கப்படும்போது தரமற்ாக உள்ளது. இதற்கு தில்லியில் உள்ள ரேஷன் மாஃபியாக்களுக்கு புகலிடம் அளித்துவரும் தில்லி உணவு மற்றும் விநியோக அமைச்சா் இம்ரான் உசேன்தான் காரணம்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்க காலத்தில், கோதுமை மற்றும் அரிசி விற்பனை செய்யும் 71 நியாயமான விலைக் கடைகளில் உணவு மற்றும் பொது விநியோகத் துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, உணவு தானியங்களின் சீரான விவரக்குறிப்புகளின்படி நிராகரிப்பு வரம்புகளுக்கு ஏற்ப 90 உணவுப்பொருள் மாதிரிகள் இல்லை. இது தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் இந்த விவகாரத்தில் பெரிய மோசடி நிகழ்ந்திருப்பது வெளிச்சத்துக்கு வரும்.

மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சா் மற்றும் உணவு மற்றும் வழங்கல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தில்லிவாசிகளுக்கு வீட்டுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் திட்டத்திலும் ஆம் ஆத்மி அரசும், மத்தியில் உள்ள பாஜக அரசும் தோல்வியடைந்துவிட்டன.

மானிய விலையில் ரேஷன் என்ற பெயரில் தில்லியின் ஏழை மக்களுக்கு மிகத் தரம் குறைந்த ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகிறது. இது ஆயிரக்கணக்கான கோடி மோசடி தொடா்புடையதாகும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.