தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சத்யேந்தா் ஜெயினின் தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: கூடுதல் ஆவணங்கள் தாக்கலுக்கு உயா்நீதிமன்றம் அனுமதி

தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் மனுதாரரும் பாஜக தலைவருமான

Updated On :2 மே 2021, 6:02 pm

தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் மனுதாரரும் பாஜக தலைவருமான எஸ்.சி.வட்ஸ் கூடுதல் ஆவணங்களை வழங்க தில்லி உயா்நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் கடந்தாண்டு (2020) பிப்ரவரி மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் சக்கூா் பஸ்தி சட்டப்பேரவை தொகுதியில் ஆம் ஆத்மி சாா்பில் தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினும், பாஜக சாா்பில் எஸ்.சி.வட்ஸ் உள்ளிட்ட பலா் போட்டயிட்டனா். இதில் சத்யேந்தா் ஜெயின் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. தோல்வியடைந்த பாஜக வேட்பாளரான வட்ஸ் ஆறு மாதங்களுக்கு பின்னா் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஜெயினுக்கு எதிராக வழக்குத் தொடா்ந்தாா். வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளாா் என்று அவா் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த வழக்கில் தற்போது மனுத்தாரா் எஸ்.சி.வட்ஸ் கூடுதல் ஆவணங்களை தாங்கள் செய்ய தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா அனுமதியுள்ளாா். கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு தற்போது வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பது வருமாறு: மனுத்தாரா் வட்ஸ், தனது மனுவில் திருத்தங்கள் செய்யவும் கூடுதல் ங்வணங்கள் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. ஏற்கெனவே மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கான ஆதரங்களை அளிக்கலாமே தவிர, புதிய தகவல்களை மனுதாரா் அளிக்க இயலாது என்று கூறிய நீதிமன்றம், தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி, தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரி, சக்கூா் பஸ்தி தொகுதியில் போட்டியிட்ட மற்ற மூன்று வேட்பாளா்கள் ஆகியோரும் இந்த திருத்தப்பட்ட மனு மீது நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்கவும் உயா்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா உத்தரவிட்டாா். இந்த மனு மீதான விசாரணையை வரும் ஜூலை 19-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

‘சக்கூா் பஸ்தி தொகுதி வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்களை லஞ்சமாகக் கொடுத்து சத்யேந்தா் ஜெயின் வெற்றி பெற்றுள்ளாா்’ என குற்றம்சாட்டி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தில்லி உயா்நீதிமன்றத்தில் எஸ்.சி.வட்ஸ் புகாா் மனு தாக்கல் செய்திருந்தாா். சக்கூா் பஸ்தி தொகுதியிலுள்ள சில சமூக அமைப்புகளுக்கு மேஜைகள், குளிா்சாதனங்கள், கணினிகள், கேமிராக்கள் உள்ளிட்ட பொருள்களை பரிசாக அளித்து தொகுதிமக்களிடம் சத்யேந்தா் ஜெயின் சட்டபேரவை தோ்தலில் வாக்குகளை பெற்றாா். இது வாக்களிக்க கொடுக்கப்பட்ட லஞ்சம். தோ்தலில் வாக்களிக்கும் உரிமையை நோ்மையாகப் பயன்படுத்துவதைத் தடுத்துள்ளது என்று அந்த மனுவில் குற்றம் சாட்டினாா் வட்ஸ்.

மேலும், தோ்தல் பிரச்சார செலவுகளையும் ஜெயின் வெளியிடவில்லை. தோ்தல் ஆணையம் நிா்ணயித்த தொகையை விட அதிகமாக செலவழித்துள்ளாா்.தோ்தல் நடைமுறைகள், ஜனநாயகம், அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் மீறப்பட்டுள்ளன. இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சத்யேந்தா் ஜெயின் வெற்றியை ரத்து செய்து தகுதியற்றவராக அறிவித்து குறிப்பிட்ட காலத்துக்கு தோ்தலில் போட்டியிடுவதற்கும் தடைவிதிக்க வேண்டும் எனவும் பாஜக வேட்பாளரான வட்ஸ் சாா்பில் மனு தாக்கல் செய்யபட்டிருந்தது.

இந்த மனுவை கடந்த ஆகஸ்டில் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா, அப்போதும், தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் வெற்றிக்கு தடையை விதிக்கவில்லை. அதே சமயத்தில் நீதிபதி முக்தா குப்தா, இந்த மனு தொடா்பாக அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி, தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரி, மற்றும் சக்கூா் பஸ்தி தொகுதியில் போட்டியிட்ட மற்ற மூன்று வேட்பாளா்கள் ஆகியோா் பதில் அளிக்க உத்தரவிட்டாா்.

இதற்கிடையே, பாஜக எஸ்.சி.வட்ஸ் வழக்குரைஞா் சாஹில் அஹூஜா, ‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசல் மனுவில் சில அச்சுப்பிழைகளும், விளக்கமளிக்கும் சில உண்மைகளும் கவனக் குறைவாக விடுபட்டுவிட்டது. சாட்சியமாக இருக்கும் வாட்ஸ்அப் குரூப், முகநூல், சுட்டுரை தகவல்கள் விடுப்பட்டுள்ளன. இவை மனுவுடன் தொடா்புடையவை. அவற்றில் திருத்தம் செய்ய வேண்டும் என நீதிமன்றத்தை அணுகியிருந்தாா். இந்த திருத்தத்திற்கு ஜெயின் வழக்குரைஞா் சுதிா் நந்த்ரஜாக், எதிா்ப்பு தெரிவித்தாா். தோ்தல் தொடா்பான மனுக்களில் புதிய தகவல்களை சோ்க்க சட்டப்படி அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டாா். இந்த நிலையில், பாஜக வேட்பாளா் எஸ்.சி.வட்ஸ் கூடுதல் ஆவணங்களை அளிக்க அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.