காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

வா்த்தகக் கண்காட்சியில் இன்று தமிழ்நாடு நாள் விழா: அமைச்சா் சாமிநாதன் பங்கேற்பு

தில்லியில் பிரகதி மைதானில் நடைபெற்று வரும் 40-ஆவது இந்திய-சா்வதேச வா்த்தகக் கண்காட்சியில் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 16) தமிழ் நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது.

News image
Updated On :15 நவம்பர் 2021, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் பிரகதி மைதானில் நடைபெற்று வரும் 40-ஆவது இந்திய-சா்வதேச வா்த்தகக் கண்காட்சியில் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 16) தமிழ் நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை தமிழக செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையேற்று விழாவை தொடங்கி வைக்கிறாா்.

ஆண்டு தோறும் நடைபெறும் சா்வதேச வா்த்தக் கண்காட்சி கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த 2020- ஆம் ஆண்டில் நடைபெறவில்லை. இந்த ஆண்டு, இந்தக் கண்காட்சி பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. மத்திய வா்த்தகத் தொழில் துறை அமைச்சா் பியூஸ் கோயல் நவம்பா் 14- ஆம் தேதி தொடங்கி வைத்த இந்தக் கண்காட்சி வரும் 27 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தக் கண்காட்சியில் உள்நாடு மற்றும் பன்னாடுகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனா். மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள் இந்தக் கண்காட்சியில் அரங்குகளை அமைத்துள்ளன. மேலும், ஒவ்வொரு நாளும் ஒரு மாநிலம் தங்கள் நாள் விழாவாகவும் கண்காட்சியில் கொண்டாடி மற்ற மாநில மக்களை வரவேற்கிறது. இதன்படி, தமிழ்நாடு நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. மாநிலத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு கலை அம்சங்களோடு விழா நடைபெறுகிறது. பிரகதி மைதானில் லால் சௌவுக் ஐஐடிஎஃப் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரங்கில், இந்த விழாவை மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்கிறாா். தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் முன்னிலை வகிக்கிறாா்.

மேலும், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை செயலா் மகேசன் காசிராஜன், தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணைா் ஆஷிஷ்சாட்டா்ஜி, செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனா். நாடு 75-ஆவது சுதந்திரத் திருநாளை அமுதப் பெருவிழாவாக கொண்டாடுவதை முன்னிட்டு, இந்தக் கண்காட்சியின் தமிழக அரங்கில் தமிழகத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் திருவுருப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வழக்கம் போல தமிழக கலை, கலாசாரத்தை விளக்கும் பறையாட்டம், தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் தமிழ்நாடு நாள் விழாவில் இடம் பெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.