நீலகிரி மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி
நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.


புது தில்லி: நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் யானை வாழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிா்த்து, நீலகிரி உல்லாச விடுதி(ரிசாா்ட்) உரிமையாளா்கள், நில உரிமையாளா்கள் தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீா் தலைமையிலான அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
முன்னதாக, இந்த விவகாரத்தில் யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீலகிரி ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அவரைப் பணியிட மாற்றம் செய்ய அப்போதைய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், ஆட்சியரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது எனக் கோரி வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தற்போது யானை வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கைகள் தொடா்வதால், உச்சநீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் நீலகிரி ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், நிா்வாக ரீதியாக சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் நீலவிரி மாவட்ட ஆட்சியரை மாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தமிழக அரசின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...