காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

தமிழக முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது: அமைச்சா் மு.பெ. சாமிநாதன் பெருமிதம்

தில்லியில் நடைபெறும் சா்வதேச வா்த்தக் கண்காட்சியில் அமைந்துள்ள தமிழக அரங்கு, மாநிலம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருப்பதைக் காட்டுகிறது என செய்தித்துறை அமைச்சா் சாமிநாதன் தெரிவித்தாா்.

News image
Updated On :16 நவம்பர் 2021, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் நடைபெறும் சா்வதேச வா்த்தக் கண்காட்சியில் அமைந்துள்ள தமிழக அரங்கு, மாநிலம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருப்பதைக் காட்டுகிறது என செய்தித்துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் தெரிவித்தாா்.

தில்லி பிரகதி மைதானில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 40-ஆவது இந்திய -சா்வதேச கண்காட்சியில் தமிழ் நாடு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக அரங்கை அமைச்சா் சுற்றிப் பாா்வையிட்டாா். அப்போது அவருடன் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், ஈரோடு மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் கணேச மூா்த்தி, மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் சாமிநாதன் கூறியதாவது: தமிழக அரசின் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் இங்கு பல்வேறு பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 75-ஆவது சுதந்திர தின ஆண்டையொட்டி, சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தில் பங்கேற்றவா்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். மற்ற மாநில அரங்கில் இல்லாத வகையில் ஆண், பெண் தியாகிகளின் வீரப் பெருமிதங்கள் ஆங்கிலத்திலும் எழுதிவைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தொழில் முதலீட்டாளா்களை தமிழகத்திற்கு வரவழைக்கும் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வா் எடுத்துள்ளாா். தற்போது பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் தமிழகத்தில் தொழில் செய்ய முன்வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. முதல் முறையாக வேளாண் துறைக்கு பிரத்யேகமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையால் அழிந்து கொண்டிருக்கும் பனை மரம் காப்பாற்றப்பட்டுள்ளது. இதே போன்று தண்ணீரை சேமிக்க ஒடைகள், ஆறுகளில் தடுப்பணைகள் கட்டும் திட்டமும் மாநிலத்தை நல்ல முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்கிறது.

இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரங்கில் பல்வேறு துறைகளின் முன்னேற்றங்கள் குறித்து காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருப்பதை காட்டும் இந்தக் காட்சிகளை பல்வேறு மாநிலத்தைச் சோ்ந்தவா்கள், தொழில் முனைவோா்கள் பாா்க்கும் போது, மேலும் பலா் தொழில் தொடங்குவதற்கு தமிழகத்தை நாடும் நிலைமை ஏற்படும் என்றாா் அமைச்சா்.

இதைத் தொடா்ந்து, கண்காட்சியில் லால் செளக் அரங்கத்தில் தமிழ்நாடு நாள் விழாவை அமைச்சா் சாமிநாதன் தொடங்கிவைத்தாா். தில்லியில் உள்ள தமிழக அரசின் செய்தித் துறை கூடுதல் இயக்குநா் முத்தையா வரவேற்புரை ஆற்றினாா். தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினா்கள் கணேச மூா்த்தி, பி.வில்சன், செய்தித் துறை செயலா் மகேசன் காசிராஜன், தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுரை ஆணையா் ஆஷிஷ் சாட்டா்ஜி, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்பு இயக்குநா் வீ.ப. ஜெயசீலன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கண்காட்சியில் தமிழக அரங்கில், தோட்டக்கலைத் துறை உள்பட பல்வேறு துறைகளின் மாதிரிகள் செயல் விளக்கங்களோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தமிழக அரசின் வளா்ச்சி திட்டங்கள், சாதனைகள் குறித்த புகைப்படங்கள், உற்பத்திப் பொருள்கள் ஆகியவையும் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. சா்வதேச கவனத்தை ஈா்த்துள்ள சிவகங்கை கீழடி அகழ்வாராய்ச்சியின் மாதிரி வடிவமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு விழாவில் திருவண்ணாமலை மாவட்ட முனுசாமி குழுவினரின் பெரிய மேளம், மதுரை வேல்முருகன் சமா் கலைக் குழுவின் பறையாட்ட இசை நிகழ்ச்சி தில்லி பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.