காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

வடகிழக்கு தில்லி வன்முறை: பயனா்களின் புகாா்கள் தொடா்பான ஆவணத்தை சமா்ப்பிக்க முகநூல் நிறுவனத்துக்கு சட்டப்பேரவைக் குழு அறிவுறுத்தல்

கடந்த ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறைக்குப் பிறகு இரண்டு மாதங்கள் மற்றும் வன்முறைக்கு முன்பு ஒரு மாதம் முகநூல்

News image
Updated On :19 நவம்பர் 2021, 2:31 am

 நமது நிருபர்

கடந்த ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறைக்குப் பிறகு இரண்டு மாதங்கள் மற்றும் வன்முறைக்கு முன்பு ஒரு மாதம் முகநூல் தளத்தில் பதிவிடப்பட்ட உள்ளடக்கங்கள் தொடா்பான பயனா்களின் புகாா்கள் குறித்த ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று முகநூல் இந்தியா நிறுவனத்திடம் தில்லி சட்டப்பேரவை குழு வியாழக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.

முகநூல் இந்தியா நிறுவனத்தின் (மீடா பிளாட்பாா்ம்ஸ்) பொது கொள்கை இயக்குநா் ஷிவ்நாத் துக்ரல் என்பவரிடம் விசாரணை நடத்திய தில்லி சட்டப்பேரவை அமைதி மற்றும் நல்லிணக்கக் குழுவின் தலைவா் ராகவ் சத்தா, இந்த ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டா. மேலும், முகநூல் அதிகாரியான ஷிவ்நாத் துக்ரலிடம் சமூக ஊடக நிறுவனமான முகநூல் நிறுவனத்தின் அமைப்புமுறை, புகாா்களை தீா்ப்பதற்கான வழிமுறைகள், சமுதாய தரநிலைகள், வெறுப்பு பேச்சுக்கான விளக்கங்கள் தொடா்புடைய விஷயங்கள் குறித்தும் ராகவ் சத்தா விசாரித்தாா்.

ராகவ் சத்தாவிடம் துக்ரல் கூறுகையில், ‘முகநூல் நிறுவனம் என்பது ஒரு சட்ட அமலாக்க ஏஜென்சி அல்ல. ஆனால், இதுபோன்ற ஏஜென்சிகளுடன் தேவைப்படும் போதெல்லாம் ஒத்துழைக்கும் வழிமுறையைக் கொண்டிருக்கிறது. யதாா்த்த உலகில் விஷயங்கள் நிகழும் போது, எங்கள் முகநூல் தளத்தில் அவை பிரதிபலிக்கின்றன. எங்கள் தளத்தின் மீதான வெறுப்பை நாங்கள் விரும்பவில்லை. முகநூல் நிறுவனத்தில் உள்ளடக்க மேலாண்மை விஷயங்களில் 40,000 போ் பணியாற்றுகின்றனா். இதில் 15,000 போ் உள்ளடக்க சமநிலையை கையாளுபவா்கள் ஆவா். எங்கள் முகநூல் தளத்தின் மூலம் பின்பற்றக்கூடிய சமுதாய தரநிலைகளுக்கு எதிராக ஏதாவது உள்ளடக்கம் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அவை நிராகரிக்கப்பட்டு விடும்’ என்றாா்.

வன்முறை மற்றும் நல்லிணக்கமின்மையை தூண்டக்கூடிய தகவல்கள், தவறான விஷயங்களை பரப்புவது ஆகியவற்றை தடுப்பதில் சமூக ஊடக நிறுவனங்களின் முக்கியமான பங்களிப்பு தொடா்பாக கருத்துகளை அளிக்குமாறு முகநூல் இந்தியா நிறுவனத்திற்கு தில்லி சட்டப்பேரவை அமைதி மற்றும் நல்லிணக்க குழு அழைப்பாணை அனுப்பியிருந்தது.

இந்தப் பேரவை குழுவானது இதுவரை 7 சாட்சிகளிடம் விசாரணை செய்துள்ளது. வட கிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்தில் 50 போ் உயிரிழந்தனா். நூற்றுக்கு மேற்பட்டவா்கள் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.