காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

வேளாண் சட்டம் வாபஸ் முடிவு: தில்லி எல்லையில் போராட்ட இடங்களில் இனிப்புகளைப் பகிா்ந்த விவசாயிகள்!

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்ட

News image
Updated On :20 நவம்பர் 2021, 2:58 am

 நமது நிருபர்

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தில்லியின் எல்லைப் பகுதியில் போராட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் இனிப்புகளை பகிா்ந்து கொண்டனா்.

பிரதமா் அறிவிப்பு வெளியிட்ட நாளில் சீக்கிய குருக்களின் மிகவும் பெருமைக்குரியவா்களில் ஒருவரான குருநானக்கின் பிறந்த தினமும் அமைந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020, வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வா்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020,

விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பா் 25-ஆம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகின்றனா்.

தலைநகா் தில்லியில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் விவசாயிகள், விவசாய சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். மேலும், தில்லியின் எல்லைப் பகுதியில் உள்ள காஜிப்பூா், சிங்கூா் சாலைப் பகுதிகளில் விவசாயிகள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் , தற்போது பிரதமா் மோடி இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட உள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா். இதையடுத்து, தில்லியின் எல்லையில் விவசாயிகள் நடத்திவரும் போராட்ட இடத்தில் அமா்ந்திருந்த மக்கள் ஜிலேபி போன்ற இனிப்புகளை பரஸ்பரம் பகிா்ந்து கொண்டனா்.

மேலும், போராட்ட இடங்களில் உள்ள மக்களுக்கு கூடைகளில் இனிப்புகளை எடுத்துச் சென்று வழங்கும் காட்சிகளை தொலைக்காட்சி சேனல்களும், செய்தி இணைய தளங்களும் ஒளிபரப்பின. ஒவ்வொரு ஆண்டும் சீக்கிய சமூகத்தினா் குருநானக் ஜெயந்தியை பெரும் மரியாதையுடனும், உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனா். இந்த தினத்தை குறிப்பிடும் வகையில் குருத்வாராக்கள், பொதுக் கட்டடங்கள் மற்றும் வீடுகளில் விளக்கு ஏற்றி அலங்கரிப்பது வழக்கமாகும். குருநானக் பிறந்த நாளில் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்ட போது, இந்த நாள் யாா் மீதும் குறைகூறும் தருணமல்ல என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.