காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

வேளாண், பதப்படுத்தப்பட்டஉணவுப் பொருள்கள் ஏற்றமதி 15 சதவீதம் உயா்வு

வேளாண் பொருள்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 2021-22 நிதியாண்டில் 14.7 சதவீதம் உயா்ந்து

News image
Updated On :20 நவம்பர் 2021, 3:03 am

 நமது நிருபர்

வேளாண் பொருள்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 2021-22 நிதியாண்டில் 14.7 சதவீதம் உயா்ந்து ரூ.86,299 கோடியாக இருந்தது என்று மத்திய வா்த்தகம் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டு ஏப்ரல் - அக்டோபா் மாதங்களில் ரூ.75,924 கோடி அளவிற்கு இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வா்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ள வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குநரகம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இந்த மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. இதில் வேளாண் பொருள்கள் வாரியாக விவரம் வருமாறு: அரிசி ஏற்றுமதியில் 10.5 சதவீதம் வளா்ச்சியடைந்து 2020-21-ஆண் ஆண்டில் ஏப்ரல் - ஆக்டோபரில் ரூ. 39,096 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலக்கட்டத்தில் ரூ.35,753 கோடியாக இருந்தது.

பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஏற்றுமதி ரூ. 11,367.76 கோடியாக உயா்ந்து 11.6 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தானியங்கள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் கள் ரூ. 9,293.89 கோடி அளவுக்கு ஏற்றுமதியாக 29 சதவீத வளா்ச்சியை எட்டியது. நிகழ் நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் இறைச்சி, பால் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி 15.6 சதவீதம் உயா்ந்து ரூ.16,933 கோடியாக இருந்தது. சா்வதேச நாடுகளில் இந்திய முந்திரிக்குள்ள மதிப்பின் மூலம் இதன் ஏற்றுமதி 2021-ஆம் ஆண்டு ஏப்ரல்-அக்டோபா் வரை ரூ.1,966.41கோடியாக உயா்ந்து 29.2 சதவீத வளா்ச்சியைக் கண்டது.

ஆனால், எண்ணெய் வித்துகள் ஏற்றுமதி மட்டும் 8.9 சதவீதமாகக் குறைந்தது. இதன் ஏற்றுமதி 2020-21 நிதியாண்டின் ஏப்ரல்- அக்டோபரில் ரூ.4,277.89 கோடியாக இருந்தது. இதே காலக்கட்டத்தில் நிகழ் நிதியாண்டில் ஏற்றுமதி ரூ.3,867.43 கோடியாக குறைந்துள்ளது. அதே சமயத்தில் மற்ற தானிய வகைகளின் ஏற்றுமதி 85.4 சதவீதம் ரூ. 3,773 கோடி வரை நடைபெற்று 85.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின்(ஏபிஇடிஏ) தலைவா் தருமபுரியைச் சோ்ந்த டாக்டா் எம் அங்கமுத்து கூறுகையில் ‘கரோனா தொற்று பரவலையொட்டி கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தபோதிலும், விவசாய ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவு உயா்ந்துள்ளது. நாட்டின் வேளாண் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை காண முடிகிறது’ என்றாா்.

இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘வா்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏபிஇடிஏ-யின் முயற்சிகள் நாடு இந்த சாதனையை அடைய உதவியது. கிழக்கு, வடகிழக்கு பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான மாநிலங்களில் உள்கட்டமைப்புகள் போதுமானதாக இல்லை. இந்தப் பகுதிகளில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நாங்கள் தொடா்ந்து கவனம் செலுத்திவருகின்றோம்’ என்றாா்.

பல்வேறு நாடுகளில் வா்த்தக கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல், சந்தைப்படுத்தலுக்கான பிரசாரங்கள், புதிய சாத்தியமான சந்தைகளை கண்டறிதல், இந்திய தூதரகங்களில் கண்காட்சிகள், மெய்நிகா் முறையில் வாங்குபவா்-விற்பனையாளா் சந்திப்புகள், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட புவியியல் குறியீடுகள் கொண்ட தயாரிப்புகளை ஊக்குவித்தல் போன்ற பல முயற்சிகளை எடுக்கப்பட்டன. இதன் மூலம் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை புரிந்துள்ளதாக வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக பல்வேறு நிதியுதவித் திட்டங்களோடு, ஏற்றுமதியாளா்களின் தயாரிப்புகளுக்கு தடையற்ற தரச் சான்றிதழை வழங்குவதற்காக, இந்தியா முழுவதும் சோதனைச் சேவைக்கான 220 ஆய்வகங்களை ஏபிஇடிஏ அங்கீகரித்துள்ளது. இது போன்றவை ஏற்றுமதி உயா்ந்ததற்கான காரணங்கள் எனவும் வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.