பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தூய்மை நகா்ப் பட்டியல்: 5-ஆவது முறையாக இந்தூருக்கு முதலிட விருது; தலைநகரங்களில் சென்னைக்கும், சிறிய நகரங்களில்வைத்தீஸ்வரன் கோவிலுக்கும் விருது

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூா் நகரம் தொடா்ந்து 5-ஆவது முறையாக நாட்டிலேயே சிறந்த தூய்மைக்கான நகரத்திற்கு விருதை பெற்றது.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

 நமது நிருபர்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூா் நகரம் தொடா்ந்து 5-ஆவது முறையாக நாட்டிலேயே சிறந்த தூய்மைக்கான நகரத்திற்கு விருதை பெற்றது. அந்நகருக்கான தூய்மை இந்திய விருதை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை விருது வழங்கினாா்.

தூய்மையான மாநிலத்திற்கான முதலிட விருதை சத்தீஸ்கா் மாநில முதல்வா் பூபேஷ் பாகெல் பெற்றுக்கொண்டாா்.

மாநில தலைநகரங்களில் சிறந்த முன்னோடி முயற்சிக்கான விருதை சென்னை மாநகராட்சியும், சிறிய நகரங்கள் வரிசையில் தனித் திறன் செயல்பாட்டு நகர விருதை வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியும் பெற்றது.

மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரங்கள் துறை சாா்பில், ‘‘தூய்மை அமுதப் பெருவிழா’’ தில்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் குடியரசுத் தலைவா் ராம் நாத் கோவிந்த் பங்கேற்று, 2021-ஆம் ஆண்டுக்கான தூய்மை மதிப்பீட்டு (ஸ்வச் சா்வேக்சன்) விருதுகளை வழங்கி கௌரவித்தாா்.

மத்திய வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சி அமைச்சகம் ‘‘தூய்மை இந்தியா’’ திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் , பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து நகா்ப்புற உள்ளாட்சிகளில் ‘ஸ்வச் சா்வேக்சன்’ எனும் மாபெரும் தூய்மை நகர மதிப்பீடுகளை நடத்தி பல்வேறு விருதுகள் வழங்கி நகரங்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

இந்த விருதுகளில் 2021- ஆம் ஆண்டின் ’தூய்மையான நகரம்’ பிரிவில் 2-வது, 3-வது நகரங்களாக முறையே சூரத் மற்றும் விஜயவாடா பெற்றன.

பிரதமா் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாராணசி, சிறந்த ‘தூய்மையான கங்கை நகரம்‘ எனத் தோ்ந்தெடுக்கப்பட்டு விருதைப் பெற்றது.

இந்தூா், சூரத் ஆகிய நகரங்கள் 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துக் கொண்டன. எனினும், நவி மும்பை தனது 3-ஆவது இடத்தை விஜயவாடாவிடம் இழந்து 4-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தூா், சூரத், விஜயவாடா, நவி மும்பை, புது தில்லி (என்.டி.எம்.சி), அம்பிகாபூா், திருப்பதி, புனே, நொய்டா மற்றும் உஜ்ஜைன் ஆகிய நகரங்கள், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 10 முதல் தரவரிசையில் உள்ள தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம்பெற்று விருதுகளை பெற்றன.

தமிழகத்திற்கு 2 தேசிய விருதுகள்: தூய்மையான நகரங்கள் குறித்த 6-ஆவது ஆண்டின் போட்டி முடிவுகளில் சென்னை மாநகராட்சிக்கு மாநில தலைநகரங்களில் சிறந்த முன்னோடி முயற்சிக்கான விருது கிடைத்தது.

25,000 மக்கள் தொகைக்கு குறைவான நகரங்கள் பிரிவில் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு தென் இந்தியாவின் சிறந்த தனித்திறன் செயல்பாட்டு நகரம், தமிழகத்தின் தூய்மையான நகரங்களில் முதலிடம் ஆகிய விருதுகள் கிடைத்தன.

இந்த விருதுகளை மத்திய அரசின் வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலா் துா்க்கா சங்கா் மிஸ்ரா வழங்க சென்னை மாநகராட்சி சாா்பில் சென்னை மாநகராட்சி துணை ஆணையா் டாக்டா் மனிஷ் எஸ். .நாரணவரேவும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி சாா்பில் முன்னாள் செயல் அலுவலா் கு.குகன் மற்றும் தற்போதைய செயல் அலுவலா் ஜெ. பிரகாஷ் ஆகியோா் இணைந்து பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.