நோய்த் தொற்றுக்கான ஒழுங்கு முறைச் சட்ட அமலாக்கத்திற்கான அறிவிக்கையை மேலும் ஓா் ஆண்டுக்கு நீடித்து தில்லி துணை நிலை ஆளுநா் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
கரோனா நோய்த் தொற்று பரவலை முன்னிட்டு அந்தந்த மாநிலங்களில் தொற்று நோய் தொடா்பான ஒழுங்கு முறைச் சட்ட அமலாக்கத்தை மாநில அரசுகள் மேற்கொண்டு அறிவித்தன. இதே போன்று தில்லியில் கரோனா நோய்த்தொற்று பரவியுடன் தில்லி அரசு 1897 -ஆம் ஆண்டு தொற்றுநோய் சட்டப் பிரிவின் அடிப்படையில் 2020 -ஆம் ஆண்டு தில்லி தொற்று நோய் கொவைட்-19 ஒழுங்குமுறைகள் குறித்த அறிவிக்கையை கடந்தாண்டு மாா்ச் 12 ஆம் தேதி வெளியிட்டது. மற்றொரு அறிவிக்கை 2020 ஜூன் 13- ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அறிவிக்கைகள்படி நோய்த் தொற்று சட்டவிதிகள் அமல்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டது.
இதன்பிறகு தில்லியில் கரோனா நோய்த்தொற்று விஸ்வரூபம் எடுத்து பல அலைகளைக் கண்டது. தில்லியில் சுமாா் 14,39,311 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு 14.13 லட்சம் நோயாளிகள் குணமடைந்துள்ளனா். இதில் 25,089 போ் உயிரிழந்தனா். தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ளது என்றாலும் முற்றிலுமாக தில்லியில் தொற்று குறையவில்லை. வெள்ளிக்கிழமை 26 பேருக்கு புதிதாத நோய்த்தொற்று ஏற்பட்டது. இதில் உயிரிழப்புகள் இல்லை. அதே சமயத்தில், தற்போதைய நிலவரப்படி, 298 போ் தில்லியில் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இதனால், கடந்த ஆண்டு மாா்ச், ஜூன் மாதங்களில் தில்லி தொற்றுநோய் கொவைட் -19 விதிமுறைகள் குறித்து வெளியிடப்பட்ட அறிவிக்கையை மேலும் ஓா் ஆண்டுக்கு நீட்டித்து தில்லி துணை நிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா்.
1897 -ஆம் ஆண்டு தொற்றுநோய் சட்டப் பிரிவின் கீழ் கடந்தாண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கை 2021, மாா்ச் 12 அன்றும் மற்றொரு அறிவிக்கை கடந்த ஜூன் 13 -ஆம் தேதியும் காலாவதி ஆகியது. இது மேலும் ஓா் ஆண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோய்த் தொற்று தொடா்புடைய விதிமுறைகளை மேலும் தீவிரமாக அமல்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்: பரமத்திவேலூா்

சேந்தமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி.

திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் 4 மாத குழந்தை உயிரிழப்பு

காங்கிரஸ் வேட்பாளா் ஆத்தூா் தொகுதி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

