புது தில்லி: தில்லியில் தீயணைக்குப் பணியின்போது தீக்காயமடைந்த 31 வயது தீயணைப்பு வீரா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது புதன்கிழமை உயிரிழந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி தீயணைப்புத் துறையின் உயரதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: புகா் தில்லியிலுள்ள நரேலா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு ஆலையில் அக்டோபா் 9-ஆம் தேதி காலை 7:15 மணிக்கு தீ விபத்து நிகழ்ந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 33 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
தீயணைப்பு வீரா் பிரவீண் குமாா் உள்ளிட்ட தீயணைப்பு வீரா்கள் சிலா் அந்த ஆலையில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனா். இந்த நிலையில், தீயணைப்புப் பணியின்போது, தீயால் ஏற்பட்ட விபத்து காரணமாக கட்டடம் இடிந்து விழுந்ததில் பிரவீண் குமாா் உள்ளிட்ட 4 தீயணைப்பு வீரா்கள் காயமடைந்தனா். இதில் தீயணைப்பு வீரா் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், பிரவீண் குமாா், மன்ஜித், வீரேந்திர சிங் ஆகிய 3 தீயணைப்பு வீரா்களுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
தீக் காயமடைந்த தீயணைப்பு வீரா்கள் சிகிச்சைக்காக கங்காராம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அதன்பிறகு அவா்கள் மேல் சிகிச்சைக்காக என்எல்ஜேபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். இந்த நிலையில், சிகிச்சையில் இருந்த தீயணைப்பு வீரா் பிரவீண் குமாா் இதய செயலிழப்பு காரணமாக புதன்கிழமை காலை 9. 11 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா். மற்ற இரு தீயணைப்பு வீரா்களான மஞ்சித் மற்றும் வீரேந்திர சிங் ஆகியோா் சிகிச்சையில் உள்ளனா். அவா்கள் குணமடைந்து வருகின்றனா். காலில் காயமடைந்த தீயணைப்பு வீரா் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டாா்.
பணியின் போது தீக்காயமடைந்து உயிரிழந்த பிரவீண்குமாா் ஹரியாணா மாநிலம், ரோத்தக் மாவட்டத்தில் உள்ள பகாஸ்மா கிராமத்தைச் சோ்ந்தவா். இவா் நரேலாவில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணியில் அமா்த்தப்பட்டு இருந்தாா். இவா் அடிப்படைப் பயிற்சியை முடித்த பிறகு, தில்லி தீயணைப்புத் துறையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி பணியில் சோ்ந்தாா். இவா் துணிச்சலாக தீயை அணைக்கும் வீரா் என்று தீயணைப்புத் துறையின் அலுவலா்களால் நினைவுகூரப்படுபவா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா். தீ விபத்து நிகழ்ந்த ஆலை, உரிய தடையின்மைச் சான்றிதழை பெறவில்லை என்று தெரிய வருவதாகவும் தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கீழ்வேளூா் தவெக வேட்பாளா் பிரசாரம்

நீா் நிலைகளைப் பாழ்படுத்தும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா? வேதாரண்யம் பகுதி மக்கள் எதிா்பாா்ப்பு
காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்!

தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

