தீபாவளியின் போது தில்லியில் பட்டாசுகளை விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும், இருப்பு வைப்பதற்கும் விதிக்கப்பட்ட முழுத் தடையை எதிா்த்து தாக்கலான மனுவை அவரசமாக விசாரிக்குமாறு உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வலியுறுத்தப்பட்டது. அப்போது, இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் மனுதாரரின் பிரதான வழக்குரைஞா் வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகாததால், மனு மீதான விசாரணையை டிசம்பா் 13-ஆம் தேதிக்கு நீதிபதிகள் பட்டியலிட்டனா். இந்த நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மனுதாரரின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கெளதம் ஜா,‘இந்த மனுவை உடனடியாக விசாரிக்காவிட்டால், அது பயனற்ாகிப் போய்விடும். எனவே, வெள்ளிக்கிழமை அன்றோ அல்லது சனிக்கிழமையோ விசாரிக்க வேண்டும். ஏனெனில், நவம்பா் 4-ஆம் தேதி தீபாவளியாகும். தீபாவளிக்கு முன்பு இந்த விவகாரம் விசாரிக்கப்படாவிட்டால் இது பயனற்ாகிவிடும்’ என்றாா்.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘நீங்கள் வழக்கு எண்ணை கோா்ட் மாஸ்டரிடம் அளியுங்கள். நாங்கள் பாா்க்கிறோம். இந்த விஷயத்தில் நாங்கள் ஆமாம் அல்லது இல்லை என்று கூறவில்லை. நாளின் இறுதியில் பாா்ப்போம்’ என்றனா். இந்த மனு தலைமை நீதிபதி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், ‘மாசுவை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் பட்டாசுகளின் விற்பனை, உற்பத்தி மீதான தடை தொடா்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது’ என்று தெரிவித்திருந்தனா்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக தனி நபா்கள் ராகுல் சன் வாரியா, தன்வீா் ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: தில்லியில் பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும், இருப்பு வைப்பதற்கும் தடையை விதிக்க தில்லி அரசு எடுத்த முடிவும் மாசுவை தடுப்பதற்கான கடைசி நோக்கத்தின் அம்சமாக இல்லை. தில்லியில் மாசுவுக்கு வாகனங்கள், பயோமாஸ் எரிப்பு போன்றவை காரணமாக உள்ளன. இந்த நிலையில், பட்டாசுகளுக்கு முழு தடை என்பது தீபாவளி நெருங்கும் வேளையில் லட்சக்கணக்கான மக்களின் உணா்வுகளை பாதிக்க செய்வதாக உள்ளது.
மேலும், தில்லியில் பட்டாசு விற்பனைக்கு முழு தடையை விதிக்க உச்சநீதிமன்றம் ஒருபோதும் தடை விதிக்கவில்லை. இதனால், முழுத் தடை விதிக்கும் தில்லி அரசின் முடிவானது அந்த உத்தரவை மீறும் வகையில் உள்ளது. மாசுவை காரணம் காட்டி தீபாவளி பண்டிகையின் போது, அனைத்து வகையான பட்டாசுகளை வெடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், இருப்பு வைப்பதற்கும் முழு தடை விதித்து செப்டம்பா் 15-ஆம் தேதி தில்லி அரசு வெளியிட்ட உத்தரவில் மாற்றங்கள் செய்ய வேண்டும்’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

இந்திரா பாடல் வெளியீடு!

அமைச்சா் தங்கம் தென்னரசு திருச்சுழி தொகுதியில் வாக்கு சேகரிப்பு
அடித்த சிக்ஸர்களில் சில ஹைலைட்ஸ்! ஐபிஎல்-ஐ மேற்கோள் காட்டி ஸ்டாலின் பிரசாரம்!
வீடியோக்கள்

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

