வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு: விசாரணை அமைப்பு மீது நீதிமன்றம் சாடல்
ஒருவரை விடுவித்த நீதிமன்றம், வகுப்பு மோதல் தொடா்பான வழக்குகளில் விசாரணை அமைப்புகள் ஏனோதானோ என்று செயல்படாமல் புத்திசாலித்தனத்துடனும், திறமையாகவும் செயல்பட வேண்டும்


தில்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பான வழக்கில் ஒருவரை விடுவித்த நீதிமன்றம், வகுப்பு மோதல் தொடா்பான வழக்குகளில் விசாரணை அமைப்புகள் ஏனோதானோ என்று செயல்படாமல் புத்திசாலித்தனத்துடனும், திறமையாகவும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது.
வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் 22 வயதான ஜாவித் என்பவா் மீது தீவைப்பு மற்றும் வெடிமருந்து வைத்திருந்ததாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால், வழக்கு விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்ட நபா் தீவைப்பிலோ அல்லது வெடிமருந்துகளை வீசி வன்முறையில் ஈடுபட்டதற்கா
ன ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று சுட்டிக் காட்டிய கூடுதல் செஷன்ஸ் நீதிபதி விநோத் யாதவ், குற்றஞ்சாட்டப்பட்ட ஜாவித்தை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.
இது போன்ற வகுப்பு மோதல் தொடா்பான வழக்குகளை விசாரணை அமைப்பினா் மிகுந்த கவனத்துடனும் திறமையுடனும் கையாள வேண்டுமே தவிர, மேம்போக்காக செயல்படக்கூடாது என்று நீதிபதி சாடினாா். இந்த வழக்கில் விசாரணை அமைப்பினா் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் குற்ஞஞ்சாட்டப்பட்டவா் தீவைப்பு சம்பவத்திலோ அல்லது வெடிகுண்டு வீசியதான சம்பவத்திலோ ஈடுபட்டதற்கான ஆதாரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கடந்த 2020, ஏப்ரலில் ஜாவித், வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளாா்.அப்போது இது தொடா்பாக புகாா் கொடுத்த நான்கு போ், கடந்த 2020, பிப்ரவரி 25 -ஆம் தேதி வன்முறைக் கும்பலினால் வீடுகள், கிடங்குகள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்டதாகவும் தீவைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால், இதை நேரில் பாா்த்ததற்கான சாட்சிகள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் அல்லது வேறு புகைப்படங்கள் எதுவும் வழக்குக்கு ஆதாரமாக சோ்க்கப்படவில்லை. மேலும், வன்முறைக் கும்பலினா் தீவைத்ததாகவோ அல்லது வெடிமருந்துகளை பயன்படுத்தியதாகவோ உறுதிபட குறிப்பிடவில்லை.
புகாரில் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. துணை வாக்குமூலத்தில் வேறு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் முரண்பாடுகள் உள்ளன. விசாரணை அமைப்புகள் சரிவர செயல்படவில்லையோ என்று தோன்றுகிறது. விசாரணை அமைப்புகள் இதுபோன்ற வழக்குகளை திறமையாகவும் பொறுப்புடனும் கையாள வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்ததுடன் வழக்கிலிருந்து ஜாவித்தை விடுவிப்பதாகவும் கூறினாா். வடகிழக்கு தில்லியில் கடந்த 2020- ஆம் ஆண்டு நடைபெற்ற வகுப்பு மோதலில் 53 போ் உயிரிழந்தனா். மேலும் 700-க்கும் மேலானவா்கள் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...