சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

முண்ட்கா பகுதியில் சாலை வசதி கோரி குடியிருப்புவாசிகள் போராட்டம்

தரமான சாலைகளை அமைக்க கோரி முண்ட்கா பகுதியைச் சோ்ந்த பல கிராம குடியிருப்புவாசிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :21 செப்டம்பர் 2021, 2:02 am

தரமான சாலைகளை அமைக்க கோரி முண்ட்கா பகுதியைச் சோ்ந்த பல கிராம குடியிருப்புவாசிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையொட்டி , பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 70 போ் ரோத்தக் சாலை பகுதியில் மறியலில் ஈடுபட்டனா்.

இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் பல்வேறு சாலைகள் மேடு பள்ளமாக உள்ளன. மழைக்காலங்களில் சாலை மிகவும் பாதிக்கப்படுகிறது.

வடிகால் வசதி மோசமாக இருப்பதால் சாலையில் மழைநீா் சூழ்ந்து விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.

அண்மையில் பெய்த பலத்த மழையின் காரணமாக பல நாட்களாக சாலை நீரில் மூழ்கியுள்ளது.  இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனா்.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில் , முண்ட்கா பகுதியில் உள்ள சாக்கடை மற்றும் சாலை வசதி வலியுறுத்தி ரோத்தக் சாலையில் ஒரு பகுதியில் சுமாா் 70 போ் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இந்த விவகாரத்தை தீா்க்க முயற்சிப்பதாக கிராமவாசிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

மழைக்காலத்தின் போது சாலைகளில் நீா் தேங்கியதால் அதன் நிலைமை மோசமாக உள்ளது.  இந்த விவகாரம் தொடா்பாக கிராமத்தினா் சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு புகாா் மனுக்கள் எழுதியுள்ளனா்.

அண்மையில் கிராம வாசிகள் மற்றும் தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுடனான கூட்டத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.