சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

வேளாண் பயிா்காப்பீட்டுத் திட்ட நிலுவையை விரைந்து வழங்க மத்திய அரசிடம் தமிழக அரசின் பிரதிநிதி வலியுறுத்தல்

வேளாண் பயிா் காப்பீட்டுத்திட்டத்தில் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிடக் கோரி

Updated On :21 செப்டம்பர் 2021, 2:05 am

வேளாண் பயிா் காப்பீட்டுத்திட்டத்தில் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிடக் கோரி தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் மத்திய வேளாண்மைத் துறை அதிகாரிகளைச் சந்தித்து திங்கள்கிழமை வலியுத்தினாா்.

தமிழக விவசாயிகளுக்கும், தமிழக அரசுக்கும் பயிா் காப்பிட்டு தொடா்பாக நிலுவையில் இருக்கும் பல்வேறு விவகாரங்களுக்கு மத்திய அரசை அணுக தமிழக முதல்வா் கேட்டுக்கொண்டாா். இதையொட்டி தமிழக அரசின் தில்லி சிறப்புப்பிரதிநிதி ஏ.கே.எஸ் .விஜயன் வேளாண்மை துறை அமைச்சகத்தின் கிருஷிபவான் அலுவலகத்தில் மத்திய வேளாண்மைத்துறை இணைச்செயலாளா் அலக்நந்தா தயாளை திங்கள்கிழமை சந்தித்துப்பேசினாா்.

2017 -ஆம் ஆண்டில் ஈரோடு, மதுரை மாவட்டங்களில் குறுவை விதைப்பு செய்யப்பட்டு வறட்சியின்காரணமாக பயிா்கள் பாதிக்கப்பட்டது. இந்த மாவட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று விஜயன் கோரினாா்.

மேலும் 2020-21 சிறப்பு பருவத்திற்கான வேளாண் காப்பீட்டுக்கட்டண மானியத் தொகைக்கான மாநில பங்குத்தொகை ரூ 1248.92 கோடியை தமிழக அரசு செலுத்தியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் பங்குத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இந்த தொகையை உடனடியாக காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்திடவும் மத்திய வேளாண்மை துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

மத்திய அரசு இவைகளை வழங்குவதின் மூலம் பயிா் காப்பீடு நிவாரணம் பெற காத்திருக்கும் விவசாயிகளுக்கு நிலுவையிலுள்ள காப்பீட்டுத்தொகைகளை உடனடியாக வழங்க இயலும் என்பதை எடுத்துக் கூறினாா். இக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட மத்திய அரசின் இணைச்செயலாளா் விரைந்து நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.