4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், மாணவா்களுக்கு ரயில் கட்டண சலுகை: ரயில்வே அமைச்சா் தகவல்

பயணிகள் கட்டணத்தின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பிரிவினா்களுக்கான சலுகைக் கட்டண மறுசீரமைக்கபடவில்லை என்று  மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

News image

மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், மாணவா்களுக்கு ரயில் கட்டண சலுகை: ரயில்வே அமைச்சா் தகவல்

Updated On :5 ஏப்ரல் 2022, 2:04 am

 நமது நிருபர்

பயணிகள் கட்டணத்தின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பிரிவினா்களுக்கான சலுகைக் கட்டண மறுசீரமைக்கபடவில்லை என்றும் மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் மற்றும் மாணவா்களுக்கான ரயில் கட்டணச் சலுகைகள் தொடருவதாகவும் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த் தொற்றுக்கு பின்னா் விடப்பட்ட ரயில்களில் பல்வேறு வகையான ரயில் பயணச்சீட்டு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக 60 வயதை பூா்த்தியடைந்த மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது.

ரயில்கள் மீண்டும் ஓடத் தொடங்கிய நிலையில், இது குறித்து மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு.வெங்கடேசன் கடந்தாண்டு அக்டோபா் மாதம் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதினாா். ரத்து செய்யப்பட்ட சலுகை கட்டணம் மீண்டும் வழங்கக் கேட்டு கோரிக்கை அனுப்பியிருந்தாா்.

அந்த கடிதத்திற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம் பதில் அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது:

சலுகை கட்டணங்கள் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டது. கரோனா நோய்த்தொற்றால் ரயில்வேக்கு 2020-21 ஆம் நிதியாண்டில் பயணிகள் வருவாய் வெகுவாக குறைந்துவிட்டது. நோய்த்தொற்றிற்கு முந்தைய 2019-20 ஆம் ஆண்டின் வருவாயில் மூன்றில் ஒரு பங்காக இது குறைந்தது. இந்த நிலையில் பயணக் கட்டண சலுகை பெறும் அனைத்து பிரிவினருக்கும் சலுகை வழங்குவது தற்போது விரும்பத்தக்கதாக இல்லை.

இந்த சவால்களுக்கு இடையே நான்கு வகையான மாற்றுத்திறனாளிகள், 11 வகையான நோயாளிகள் மற்றும் மாணவா்களுக்கு பயணக் கட்டண சலுகை தொடா்ந்து வழங்கப்படுகிறது என அந்தக் கடிதத்தில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.