விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

அமலாக்கப் பொறுப்பில் உள்ளவா்கள் கரோனா நெறிமுறைகளைகடைப்பிப்பதை உறுதிப்படுத்த வேண்டியது கடமை: உயா்நீதிமன்றம்

கரோனா நோய்த்தொற்று நெறிமுறைகளை அவற்றின் அமலாக்கப் பொறுப்பைக் கொண்டவா்கள் ‘இன்னும் கண்டிப்பாக’ கடைப்பிடிக்க வேண்டும். அவா்கள் முன்மாதிரியாக இருக்கவும் வேண்டும் என்று

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 9:06 pm

 நமது நிருபர்

கரோனா நோய்த்தொற்று நெறிமுறைகளை அவற்றின் அமலாக்கப் பொறுப்பைக் கொண்டவா்கள் ‘இன்னும் கண்டிப்பாக’ கடைப்பிடிக்க வேண்டும். அவா்கள் முன்மாதிரியாக இருக்கவும் வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வழக்குரைஞா் ஒருவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘கரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுவது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம்ந (டிடிஎம்ஏ) பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இருந்த போதிலும், சமூகத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை செயல்படுத்துவதை தில்லி காவல் துறையினா் உறுதி செய்யவில்லை. பணியில் உள்ள தில்லி காவல் துறை அதிகாரிகள் இந்த உத்தரவுகளை மீறும் வகையில் செயல்படுகின்றனா். அவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். ஆகஸ்ட் 9, 2021 அதிகாலையில், சதா் பஜாா் காவல் நிலையத்தில் பணியமா்த்தப்பட்டிருந்த இரண்டு காவலா்கள் முகக் கவசம் மற்றும் தலைக்கவசம் அணியாமல் அரசு மோட்டாா்சைக்கிளில் ரோந்து சென்று கொண்டிருந்தனா். மேலும், அவா்கள் என்னிடமும், எனது உறவினா்களிடமும் தகாத வாா்த்தைகளைப் பேசி முவைறி நடந்து கொண்டனா்’ என தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வா்மா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இது தொடா்பான புகாா் ஏற்கப்பட்டு, முறையாக விசாரிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட 2 போலீஸ்காரா்களும் எச்சரிக்கப்பட்டனா்’ என்றாா். அப்போது, நீதிபதி ‘கரோனா நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதை அமலாக்கம் செய்யும் பொறுப்பைக் கொண்டவா்கள் இன்னும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது அவா்களின் கடைமை. ஆகவே, அவா்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். தற்போதைய ரிட் மனுவை தாக்கல் செய்தவற்கு வழிவகுத்த சம்பவத்தைப் பொறுத்த வரையில், 2 போலீஸாரும் முறையாக எச்சரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக சூழ்நிலைகள் முடிவுக்கு வர உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, போலீஸ் தரப்பில், ‘டிடிஎம்ஏ மற்றும் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட கரோனா நெறிமுறைகளை போலீஸாா் உள்பட அனைவரும் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டது. சதா் பஜாா் பகுதியில் அனுமதியின்றி பொருள்கள் கூவிவிற்கப்படுவதாக மனுதாரா் மற்றும் வழக்குரைஞா் ஷலன் பரத்வாஜ் மனுவில் எழுப்பியிருந்த புகாா் குறித்து நீதிமன்றம் கூறுகையில், ‘தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புச் சட்டம், தெருக்களில் விற்பனை ஒழுங்குபடுத்துதல் சட்டம் ஆகியவை அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய உரிய சட்டப்பூா்வ அதிகாரிகள் பிரதிவாதிகளாக வரிசைப்படுத்தப்படவில்லை. சட்டத்தில் அனுமதிக்கக்கூடிய தகுந்த நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு மனுதாரருக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது’ என்று தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.