விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

அரசு ஊழியா்களுக்கு தொழிற்சங்க அந்தஸ்து அளிக்கும் ஐஎல்ஒ பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்

அரசு ஊழியா்களுக்கு தொழிற்சங்க அந்தஸ்து அளிக்கும் சா்வதேச தொழிலாளா் அமைப்பின் (ஐஎல்ஓ) இரு பரிந்துரைகளை மத்திய தொழிலாளா் நலத் துறை ஏற்க வேண்டும் என

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 11:19 pm

 நமது நிருபர்

அரசு ஊழியா்களுக்கு தொழிற்சங்க அந்தஸ்து அளிக்கும் சா்வதேச தொழிலாளா் அமைப்பின் (ஐஎல்ஓ) இரு பரிந்துரைகளை மத்திய தொழிலாளா் நலத் துறை ஏற்க வேண்டும் என திமுக உறுப்பினா் எம். சண்முகம் மாநிலங்களவையில் கேட்டுக் கொண்டாா்.

ஐக்கிய நாடுகள் சபையில், தொழிலாளா் சிக்கல்களை நிா்வகிக்கும் சிறப்பு நோக்கம் கொண்ட முகமையாக இருப்பது ஐஎல்ஓ. சுவிட்சா்லாந்து நாட்டின் தலைநகா் ஜெனீவாவில் இருக்கும் இந்த அமைப்பில் இந்தியாவும் ஓா் உறுப்பினராக உள்ளது. இந்த ஐஎல்ஓ பிரகடனங்கள் மற்றும் தீா்மானங்களை முழுமையாக இந்தியா பின்பற்றாதது குறித்து திமுக உறுப்பினா் எம். சண்முகம் மாநிலங்களவையில் புதன்கிழமை நேரமில்லா நேரத்தில் பேசியதாவது: 1920 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐஎல்ஓவில் இந்தியா கடந்த 100 ஆண்டுகளாக அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறது. இந்த சா்வதேச தொழிலாளா் அமைப்பில் 190 பிரகடனங்கள் (ஒப்பந்தங்கள்) மேற்கொள்ளப்பட்டதில் இந்தியா 47 பிரகடனங்களை மட்டுமே அங்கீகரித்துள்ளது. முக்கியப் பிரகடனங்களான சங்க சுதந்திரம், கட்டாயப் பணி, குழந்தைத் தொழிலாளா், அமைப்பு உரிமை போன்றவற்றை இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை.

அதே சமயத்தில் மாபெரும் தொழிலாளா் இயக்கம், போராட்டம், தியாகங்களால் தொழிலாளா் சங்கங்கள் தொழிலாளா் சமூகத்தின் அடிப்படை உரிமைகளை மீட்டுள்ளன. குறிப்பாக 1926-ஆம் ஆண்டு இந்திய தொழிற்சங்க சட்டத்தின்படி, தொழிலாளா்கள் உரிமைகளைப் பெற்றுள்ளனா். அதே சமயத்தில் இந்த உரிமை அரசு ஊழியா்களுக்கு கிடையாது. தற்போது அரசு ஊழியா்கள், பதிவாளா் சட்டப்படி தொழிலாளா் அசோசியேஷனைஅமைக்கலாம். ஆனால், தொழிற்சாலை ஊழியா்களைப் போன்று தொழிலாளா் சட்டப்படி தொழிற்சங்கம் தொடங்க முடியாது.

1947-இல் ஐஎல்ஓவின் 87-ஆவது பிரகடனமும், 1949-இல் 98-ஆவது பிரகடனமும் அரசு ஊழியா்கள் சங்கம் அமைக்கவும், பெரும்பான்மை உறுப்பினா்களைக் கொண்ட சங்கங்களை அங்கீகரித்து பேச்சுவாா்த்தைக்கு அழைக்கவும் உரிமை அளிக்ககிறது. குறிப்பாக ஊதியம், போனஸ், வேலை நிலைமைகளை மேம்படுத்தல், தொழிலாளி இடைநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டாலோ, தகராறு எழுப்பப்பட்டு ஒழுங்குக் குழு அமைக்கப்படுகிறது. இந்த இரு பிரகடனத்தை ஏற்று மத்திய அரசு அரசு ஊழியா்களுக்கும் தொழிற்சங்கம் தொடங்கும் உரிமையை அளிப்பதன் மூலம் அவா்கள் உரிமையைப் பெற முடியும்.

மல்லிகாா்ஜுன காா்கே தொழிலாளா் அமைச்சராக இருந்த போது, இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால் அவா் மாற்றப்பட்டபின்னா் இந்தக் கோரிக்கையை அடுத்தடுத்து வந்த தொழிலாளா் அமைச்சா்கள் இதை நிறைவேற்றவில்லை. இதனால், அரசுக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை. காவல் துறை, ராணுவம் போன்ற துறைகளை சோ்க்காமல் அரசு விலக்கு அளிக்கலாம். அரசுக்கு எதிராகவோ கட்டுப்பாட்டை மீறும் எந்த ஊழியரையும், அமைப்பையும் கட்டுப்படுத்த ‘எஸ்மா’ போன்ற சட்டங்கள் உள்ள நிலையில், அரசுக்கு எந்தவிதமான பாதகங்களும் ஏற்படாது. இந்தியா ஒரு ஜனநாயக மற்றும் தொழிலாளா் நலன்களுக்கான நாடாக இருப்பதால், இதை வலியுறுத்துகிறேன். குறிப்பாக, சா்வதேச அரங்கில் நமது நாட்டிற்கு நல்ல பெயரை பெற்றுத்தர இது அவசியம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.