விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

வக்பு வாரிய விவகாரம்: சட்டப்படி விரைவில் தீா்வு- உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு பதில்

தில்லி வக்பு வாரியத் தலைவா் அமானத்துல்லா கான், வாரியத்தின் இரு உறுப்பினா்களை நீக்கக் கோரிய மனுக்களும், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானமும் உரிய அதிகாரியிடம்

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 9:07 pm

 நமது நிருபர்

தில்லி வக்பு வாரியத் தலைவா் அமானத்துல்லா கான், வாரியத்தின் இரு உறுப்பினா்களை நீக்கக் கோரிய மனுக்களும், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானமும் உரிய அதிகாரியிடம் நிலுவையில் இருப்பதாகவும், அதன் மீது சட்டப்படி விரைவில் தீா்வு காணப்படும் என்றும் உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு பதில் அளித்தது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி மனோஜ் குமாா் ஓரி, அரசின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு இந்தச் சூழலில் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி, அவற்றை தீா்ப்பதற்கான உத்தரவுகளைக் கோரிய மனுக்களை பைசல் செய்துவைத்தாா். இந்த விவகாரத்தில், உறுப்பினா்கள் பா்வேஸ் ஹஷ்மி மற்றும் சவுத்ரி ஷரீப் அகமது ஆகியோரை நீக்குவதற்காக டிசம்பா் 27, 2021 மற்றும் 2022, மாா்ச் 7-ஆம் தேதி தாம் அளித்த மனுக்கள் மீது முடிவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அமானத்துல்லா கான் மனு தாக்கல் செய்திருந்தாா். இதே போன்று, அகமது மற்றும் பிறா் தரப்பில் மாா்ச் 4-ஆம் தேதி அமானத்துல்லா கானுக்கு எதிராக அளித்த நம்பிக்கையில்லா தீா்மானம் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

தில்லி வக்பு வாரியத்தின் ஏழு உறுப்பினா்களில் முன்னாள் காங்கிரஸ் எம்பி பா்வேஸ் ஹஷ்மி, சவுத்ரி ஷரீப் அகமது, ரசியா சுல்தானா மற்றும் நயீம் பாத்திமா கஸ்மி ஆகிய நால்வரும் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மான நோட்டீஸை துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில் மாா்ச் 4-ஆம் தேதி சமா்ப்பித்தனா். அதில், ஊழல், சட்டவிரோத ஆட்சோ்ப்பு மற்றும் அடக்குமுறை ஆகியவை தொடா்பான குற்றச்சாட்டுகளை அவருக்கு எதிராக சுமத்தியிருந்தனா். ஓக்லாவைச் சோ்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான், தன் மீதான குற்றச்சாட்டுகள் ’பொய்’ என்று கூறியிருந்தாா்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது நீதிமன்றம் கூறுகையில், ‘அந்தந்த உரிமைகள் மற்றும் தரப்பினரின் வாதங்கள் முன்வைக்க இடம் உள்ளது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு தெரிவித்துள்ள நிலைப்பாட்டை கருத்தில் கொள்ளும் போது, தற்போதைய மனுக்கள் மீது மேலும் உத்தரவுகள் பிறப்பிக்கும் தேவை எழவில்லை. இதனால், இவை முடித்துவைக்கப்படுகின்றன’ எனத் தெரிவித்தது.

தில்லி அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்குரைஞா் (சிவில்) கூறுகையில், ‘கோரிக்கை மனுக்களும், நம்பிக்கை இல்லாத் தீா்மான நோட்டீஸும் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் நிலுவையில் உள்ளன. மேலும் அவை சட்டத்தின்படி விரைவாக முடித்துவைக்கப்படும்’ என்றாா். அமானத்துல்லா கான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.சுஃபியான் சித்திக், ‘அமானத்துல்லா கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் ’அரசியல் பொய் பிரசாரத்தின் விளைவாகும்’ என்று வாதிட்டாா். ஷரீப் மற்றும் பிறரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மஹ்மூத் பிரச்சா, கானுக்கு எதிராக வழங்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மான நோட்டீஸை ஆதரித்து வாதங்களை முன்வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.