ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?மேற்குவங்கம்: மாநிலங்களவையின் 3 இடங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

எதிர்நீச்சல் - 2 தொடரில் மாற்றம்! அறிமுகமாகும் புதிய வில்லன்!

எதிர்நீச்சல் - 2 தொடரில் புதிய வில்லன் பாத்திரத்தில் அஷ்வின் தக்‌ஷின் அறிமுகமாகிறார்.

News image

எதிர்நீச்சல் - 2 தொடரில் அஷ்வின் தக்‌ஷின் - படம்: இன்ஸ்டாகிராம்

Updated On :1 ஏப்ரல் 2026, 2:14 pm IST

எதிர்நீச்சல் - 2 தொடரில் புதிய வில்லன் பாத்திரத்தில் நடிகரும் பின்னணிக் குரல் கொடுப்பவருமான அஷ்வின் தக்‌ஷின் இணைந்துள்ளார்.

ஆணாதிக்கம் கொண்டவர்கள் இருக்கும் வீட்டுக்கு செல்லும் மருமகள்கள், புகுந்த வீட்டில் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

இந்தத் தொடரில் பார்வதி, ஸ்ரீஜா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, வேல ராமமூர்த்தி, விபு ராமன் உள்ளிட்டோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கதையின் படி, ஆதி குணசேகரனால் தாக்கப்படும் ஈஸ்வரி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வருகிறார்.

3 ஆண்டுகள் சுயநினைவு இல்லாமல் இருக்கிறார் ஈஸ்வரி. இதனைத் தொடர்ந்து, ஈஸ்வரிக்கு சுயநினைவு திரும்பிய நிலையில், மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்புகிறார். ஆனால், 3 ஆண்டுகள் நடந்த ஏதுவும் அவருக்கு நினைவில்லை.

இந்தச் சூழலில், மாவட்ட ஆட்சியர் மதிவதனி, ஜனனியை செல்போன் மூலம் அழைத்து, கொடூமான வில்லன் ஒருவன் வரப்போவதாக எச்சரிக்கை விடுக்கிறார். அந்த வில்லன் பாத்திரத்தின் பெயர் ராவணன் ஆதிமுத்து.

எதிர்நீச்சல் - 2 தொடரில் ராவணன் ஆதிமுத்து பாத்திரத்தின் இணைந்துள்ளது தொடரில் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும் ஆதி குணசேகரன் பாத்திரத்துக்கு கடும் போட்டியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராவணன் ஆதிமுத்து பாத்திரத்தில் நடிப்பவர், நடிகரும் பின்னணிக் குரல் கொடுப்பவருமான அஷ்வின் தக்‌ஷின் இணைந்துள்ளார். இவரின் பாத்திரத்தில் கோலங்கள் தொடர் நடிகர் அஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஷ்வின் தக்‌ஷின் நடிக்கிறார்.

நடிகர் அஷ்வின் தக்‌ஷின் ஐந்தாம் வேதம் இணையத் தொடரில் நடித்து பிரபலமானவர். பல நடிகருக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

Summary

Actor and voice-over artist Ashwin Dakshin has joined the series Ethirneechal 2 in a new villainous role.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.