குஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!தவெக ஆட்சியில் கடன் ரூ. 20 லட்சம் கோடியாக உயரும்! தங்கம் தென்னரசு சவால்!மக்களிடம் இருந்து தப்பிக்கும் தவெக! வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு! விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சாய்பாபா கோவிலில் திருமண நாளைக் கொண்டாடிய கனிகா!

18 ஆண்டுகளுக்கு முன்பு மணமேடையில் கணவருடன் மாலை மாறிக்கொண்டதைப்போல, சாய்பாபா முன்பு மாலை மாற்றிக்கொண்ட நடிகை கனிகா...

News image

கணவருடன் நடிகை கனிகா - இன்ஸ்டாகிராம்

Updated On :17 ஜூன் 2026, 3:43 pm IST

நடிகை கனிகா தனது திருமண நாளை சாய்பாபா கோயிலில் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். 18 ஆண்டுகளுக்கு முன்பு மணமேடையில் கணவருடன் மாலை மாறிக்கொண்டதைப்போல, சாய்பாபா முன்பு மாலை மாற்றிக்கொண்டு திருமண நாளைக் கொண்டாடியுள்ளனர்.

அடிக்கடி சாய்பாபா கோவிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நடிகை கனிகா, சமீபத்தில் விஜய்யின் சீரடி வருகையின்போதும் சாய்பாபா கோயிலுக்கு வந்திருந்தார். விஜய்யுடன் சீரடியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

தற்போது 18 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி சாய்பாபா கோயிலுக்கு, குடும்பத்துடன் கனிகா சென்றுள்ளார்.

மணிரத்னம் தயாரிப்பில் உருவான ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கனிகா, தென்னிந்திய சினிமாவின் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறினார்.

மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி போன்ற நட்சத்திர நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர். பின்னர் சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வந்தார்.

பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்நீச்சல் தொடரில் இருந்து விலகினார். தனது மகன் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக, அவனுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக தொடரில் இருந்து விலகினார்.

சின்ன திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்றுவந்த கனிகா சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர். தற்போது தனது கணவருடன் 18 ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

குடும்பத்துடன் நடிகை கனிகா / திருமண மேடையில் கனிகா

குடும்பத்துடன் நடிகை கனிகா / திருமண மேடையில் கனிகா - இன்ஸ்டாகிராம்

சாய்பாபா கோவிலில் தனது கணவருடன் பரஸ்பரம் மாலை மாற்றிக்கொண்டு வழிபாடு செய்தனர். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாக கனிகா பதிவிட்டுள்ளார். கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

கனிகாவின் திருமண நாளுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

Actress Kaniha celebrate anniversary with husband in saibaba temple viral photos

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.