இந்து - முஸ்லிம் நட்பின் ஆழத்தை விளக்கும் வகையில் நடிகை வைஷ்ணவி மற்றும் ஸீபா ஷெரின் ஷாயிக் பகிர்ந்துள்ள படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
எதிர்நீச்சல் தொடரின் நாயகி மதுமிதாவுக்கு மிகவும் நெருக்கமானவரான வைஷ்ணவி, அத்தொடரில் நடித்த நடிகை ஸீபா ஷெரின் உடனும் நட்பு பாராட்டி வருகிறார்.
சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களும் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் நடிகை ஸீபா ஷெரின் நடித்து வருகிறார். இயக்குநர் திருச்செல்வத்தின் கதாபாத்திரமான ஜீவானந்தத்திற்கு உதவியாளராக இத்தொடரில் நடிகை ஸீபா நடிக்கிறார்.

நடிகை வைஷ்ணவி - ஸீபா ஷெரின் ஷாயிக் - இன்ஸ்டாகிராம்
ஹிஜாப் அணிந்தவாறே எதிர்நீச்சல் தொடரிலும் நடிப்பதால், ஹிஜாப் அணிந்து நடிக்கும் முதல் முஸ்லிம் நடிகை என்ற பாராட்டையும் பெற்றுள்ளார்.
இதேபோன்று சன் தொலைக்காட்சியின் புதுவசந்தம் தொடரில் நடிகை வைஷ்ணவி நாயக் நடித்து வருகிறார். இதற்கு முன்பு வில் வித்தை என்ற படத்திலும் நடிகை வைஷ்ணவி நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.

நடிகை வைஷ்ணவி - ஸீபா ஷெரின் ஷாயிக்
சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய வைஷ்ணவி, தற்போது நடிகை ஸீபா உடன் வெளியே சென்ற புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

நடிகை வைஷ்ணவி - ஸீபா ஷெரின் ஷாயிக்
இதற்கு முன்பு இருவரும் சேர்ந்து வெளியே சென்று நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள், விடியோக்களை பகிர்ந்திருந்தாலும் இம்முறை, இந்து - முஸ்லிம் நட்பு என்று குறிப்பிட்டு அவர்கள் நெருக்கமாக உள்ள புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இவர்களின் நட்புக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Summary
Hindu Muslim friendship Photos shared by TV actresses vaishnavi naayak Ziba Shirin Shaikh go viral online
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











