வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

எங்க ஊரு பாட்டுக்காரி! திருச்செந்தூர் கோயிலில் கன்றுக்குட்டியுடன் பாடிய எதிர்நீச்சல் நடிகை!

திருச்செந்தூர் கோயிலில் கன்றுக்குட்டியுடன் பாடல் பாடிய நடிகை பார்வதி குறித்து...

News image

திருச்செந்தூர் கோயிலில் நடிகை பார்வதி - இன்ஸ்டாகிராம்

Updated On :29 ஜூன் 2026, 3:49 pm IST

எதிர்நீச்சல் தொடரின் நாயகி பார்வதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கு கன்றுக்குட்டியுடன் பாடல் பாடுவதைப்போன்று விடியோவைப் பதிவிட்டுள்ளார்.

அந்த விடியோவில் பார்வதியின் ரசிகர்கள் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வரும் நிலையில், அவரை கேலி செய்யும் விதமாக ’’எங்க ஊரு பாட்டுக்காரி’’ என நடிகர் அஸார் கருத்துப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு சமூக வலைதளப் பக்கத்தில் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் -2 (எதிர்நீச்சல் தொடர்கிறது) தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சன் நெக்ஸ்ட் செயலியில் நண்பகல் 12 மணிக்கே புதிய எபிஸோடுகள் ஒளிபரப்பாகின்றன.

முதல் பாகத்தில் மதுமிதா நாயகியாக ஜனனி என்ற பாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், 2வது பாகத்தில் நடிகை பார்வதி நாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சபரிநாதன் சக்தி என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர்களுடன் ஹரிப்பிரியா இசை, பிரியதர்ஷினி, ஸ்ரீஜா, வேல ராமமூர்த்தி, விபு ராமன், கமலேஷ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தனது வசீகரமான தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்த பார்வதியின் இயல்பான நடிப்பு, எதிர்நீச்சல் -2 தொடரில் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

சமூக வலைதளப் பக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய இவர், தற்போது திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்ற விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த விடியோவில் கன்றுக்குட்டியுடன் முருகனை நினைத்து மனமுருகப் பாடுகிறார். மேலும் கோயிலில் எடுத்த சில புகைப்படங்களையும் விடியோவில் இணைத்துள்ளார். இதில் பதிவிட்டுள்ள நடிகர் அஸார், ’’எங்க ஊரு பாட்டுக்காரி’’ என அவரை கேலி செய்யும் வகையில் பதிவிட்டுள்ளார்.

முருகனை நினைத்து பாடிக்கொண்டிருப்பவரை கேலி செய்ய வேண்டாம் என ரசிகர்கள் பலர் பார்வதிக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Summary

Sun TVs Ethir Neechal actress Parvathi singing with a calf at the Thiruchendur temple

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.