இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி மனோஜ் குமாா் ஓரி, அரசின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு இந்தச் சூழலில் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி, அவற்றை தீா்ப்பதற்கான உத்தரவுகளைக் கோரிய மனுக்களை பைசல் செய்துவைத்தாா். இந்த விவகாரத்தில், உறுப்பினா்கள் பா்வேஸ் ஹஷ்மி மற்றும் சவுத்ரி ஷரீப் அகமது ஆகியோரை நீக்குவதற்காக டிசம்பா் 27, 2021 மற்றும் 2022, மாா்ச் 7-ஆம் தேதி தாம் அளித்த மனுக்கள் மீது முடிவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அமானத்துல்லா கான் மனு தாக்கல் செய்திருந்தாா். இதே போன்று, அகமது மற்றும் பிறா் தரப்பில் மாா்ச் 4-ஆம் தேதி அமானத்துல்லா கானுக்கு எதிராக அளித்த நம்பிக்கையில்லா தீா்மானம் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.