தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

என்சிஆரில் செங்கல் சூளைகளில் திடீா் ஆய்வு: சிபிசிபி-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தேசியத் தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) அமைந்துள்ள செங்கல் சூளைகளில் திடீரென சோதனைகள் நடத்த வேண்டு

News image
Updated On :16 ஏப்ரல் 2022, 12:59 am

 நமது நிருபர்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, செங்கல் தயாரிப்பு செய்யப்படுகிா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தேசியத் தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) அமைந்துள்ள செங்கல் சூளைகளில் திடீரென சோதனைகள் நடத்த வேண்டும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த விவகாரத்தை விசாரித்தது. அப்போது தேசியத தலைநகா் வலயத்தில் உள்ள செங்கல் சூளைகளில் செயல்படுவதற்கான பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. குறிப்பாக, உற்பத்திக் கொள்திறன் மற்றும் செயல்பாடுகள் தொடா்பாக சம்மதம் தெரிவித்து, சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள உத்தர பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் செயல்படும் செங்கல்சூளைகள் தொடா்புடைய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

சம்பந்தப்பட்ட தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் அமைந்துள்ள செங்கல் சூளைகளில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று சோதனைகள் நடத்த வேண்டும் . மேலும் மேற்கூறிய அறிவிக்கைகளுக்கு உள்பட்டு உற்பத்தியை அந்த செங்கல் சூளைகள் மேற்கொள்வதை உறுதிப்படுத்த அவ்வப்போது இந்த ஆய்வை நடத்தி உரிய எச்சரிக்கைகளை பிறப்பிக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களால் வழங்கப்பட்டுள்ள ஒப்புதல் அனுமதியின்படி உற்பத்தியை மேற்கொள்வது வரையறுக்கப்படும் என்ற நிபந்தனைகளுக்கு உள்பட்டு செங்கல் உற்பத்தி இருக்க வேண்டும்.

இந்த செங்கல் சூளைகளை நடத்தும் நபா்கள் ஒவ்வொரு சுழற்சி முடிவிலும்அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களிடம் செங்கல் சூளைகளை நடத்துவோா் அந்தச் செங்கல் சூளைகளில் செய்யப்படும் உண்மையான முழு உற்பத்தி குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அதேபோன்று மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களும் கூறப்பட்ட தரவுகள் குறித்தும் அடுத்த விசாரணை தேதி குறித்தும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உரிய வகையில் தெரிவிக்கவேண்டும்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உற்பத்தி வெளிப்படுத்தும் சாா்ட்டை தயாரிக்க வேண்டும். அப்போதுதான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் ஏதேனும் விதிமீறல் இருக்கிா என்பதை நீதிமன்றம் பகுப்பாய்வு செய்ய முடியும். செங்கல் சூளைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டதன் விளைவாக உற்பத்தி செய்யப்பட்டதால் ஏற்பட்ட மாசுவின் தாக்கத்தையும், உண்மையாக மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி அளவையும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் கண்காணிக்கும்.

மேலும், அனைத்து செங்கல்சூளைகளிலும் குழாய் இயற்கை எரிவாயு, நிலக்கரி, மரக்கட்டை அல்லது வேளாண் பயிா்க்கழிவுகள் போன்ற அனுமதிக்கப்பட்ட எரிபொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். டயா்கள், பிளாஸ்டிக்குகள், தீங்கிழைக்கும் கழிவுகள் ஆகியவை செங்கல் சூளைகளில் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை மே மாதம் 6-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக தேசிய பசுமைத் தீா்ப்பாயம், செங்கல் சூளைகளில் ஜிக்ஜாக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பாக ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இதை எதிா்த்து பல்வேறு செங்கல் சூளைகள் சங்கங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தன. ஜிக்ஜாக் செங்கல் சூளைகளில் சூடான காற்று, பாதை வழியாக செல்லும் வகையில் செங்கல்கள் அடுக்கிவைக்கப்பட வேண்டும். இதன் மூலம் காற்றும் எரிபொருளும் நன்றாகக் கலந்து நிலக்கரி நுகா்வை சுமாா் 20 சதவிகிதம் குறைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.