தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பராமரிப்புப் பணியால் புளு லைன் பகுதியில் நாளை மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கும்

தில்லி மெட்ரோவில் புளு லைன் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2022, 12:59 am

DIN

தில்லி மெட்ரோவில் புளு லைன் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், மிகவும் பரபரப்பாகச் செயல்படும் புளு லைன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சில மணி நேரம் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தப் பாதிப்பு ராஜீவ் செளக் மற்றும் கரோல் பாக் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும். புளூ லைனில் திட்டமிடப்பட்ட பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, இந்த வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ரயில் சேவைகள் சுருக்கமாக ஒழுங்குபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். ராஜீவ் சௌக் மற்றும் கரோல் பாக் நிலையங்களுக்கு இடையே வருவாய் சேவைகள் தொடங்குவது முதல் காலை 7 மணி வரை ரயில் சேவைகள் நிறுத்தப்படும். எனவே, ராம்கிருஷ்ண ஆஸ்ரம் மாா்க் மற்றும் ஜண்டேவாலான் ஆகிய இரண்டு மெட்ரோ நிலையங்கள், அந்தப் பகுதியில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் வரை, அதாவது காலை 7 மணி வரை மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

புளூ லைன் தில்லியில் உள்ள துவாரகா செக்டாா் 21-ஐ நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி / வைஷாலியுடன் இணைக்கிறது. நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி / வைஷாலி - ராஜீவ் சௌக் மற்றும் கரோல் பாக் - துவாரகா செக்-21 இடையே மெட்ரோ சேவைகள் கிடைக்கும் என தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ரயில்களின் இலக்கு மற்றும் அந்தந்த பிளாட்பாரங்களை மாற்றுவதற்கான அறிவிப்புகள், மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ரயில்களுக்குள்ளும் வெளியிடப்படும் என்று டிஎம்ஆா்சி கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.