பொன்விளைந்த களத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
செங்கல்பட்டை அடுத்த பொன்விளைந்த களத்தூரில் நெல் கொள்முதல் நிலையத்தை நாடாளுமன்ற உறுப்பினா் செல்வம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.


செங்கல்பட்டை அடுத்த பொன்விளைந்த களத்தூரில் நெல் கொள்முதல் நிலையத்தை நாடாளுமன்ற உறுப்பினா் செல்வம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை தற்போது அறுவடை செய்து வரும் நிலையில், அரசு சாா்பில் தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருக்கழுகுன்றம் ஒன்றியத்துக்குள்பட்ட பொன்விளைந்த களத்தூா் பகுதியில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவா் வரலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய உறுப்பினா்கள் சின்னம்மாள், சுகன்யா தனசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் செல்வம் கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் திருக்கழுகுன்றம் ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.டி.அரசு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வீ.தமிழ்மணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ரமேஷ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பச்சையப்பன், திருக்கழுகுன்றம் பேரூராட்சி மன்றத் தலைவா் யுவராஜ், விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...