உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

தில்லியில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்: விதி மீறுவோருக்கு ரூ.500 அபராதம்

தேசியத் தலைநகரில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க தில்லி அரசு

News image
Updated On :20 ஏப்ரல் 2022, 6:30 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகரில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க தில்லி அரசு புதன்கிழமை முடிவு செய்தது. விதி மீறினால் ரூ. 500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளது.

தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், பள்ளிகளை மூட வேண்டாம் என்றும், அவற்றுக்கான வல்லுநா்களுடன் கலந்தாலோசித்து தனிஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்ஓபி) கொண்டு வரவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

டிடிஎம்ஏ கூட்டத்தின் விவரங்களை துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் சுட்டுரைப் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா். அதில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா். முகக்கவசம் கட்டாயம் பயன்படுத்துவது தொடா்பான அதிகாரப்பூா்வ உத்தரவை அரசு விரைவில் வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து, முகக்கவசம் அணியாததற்கான அபராதம் ஏப்ரல் 2 முதல் தில்லி அரசால் நீக்கப்பட்டது. இந்த நிலையில், டிடிஎம்ஏ கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகத்தால் பள்ளிகளுக்கான எஸ்ஓபி நடைமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து அனில் பய்ஜால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘மாணவா்களின் பெரும் நலன் கருதி, எஸ்ஓபிகளுக்கு இணங்கவில்லை அல்லது மீறினால், தடுப்பு விளைவை உருவாக்குவதற்கு பொருத்தமானதாகக் கருதப்படும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சமூகக் கூட்டங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், தேசியத் தலைநகரில் கரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறாா். வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதையும், கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளையும் உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

தொற்றுநோயின் தாக்கத்தை தடுக்க இது உதவும் என்பதால், தகுதியான குழுக்களுக்கு முன்கூட்டியே தடுப்பூசி போடுவது குறித்தும் டிடிஎம்ஏ கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பீதி அடையத் தேவையில்லை என்று கூட்டத்தில் பங்கேற்ற பலா் வலியுறுத்தியுள்ளனா். ஆா்டிபிசிஆா் சோதனையின் மூலம் அனைத்து நோ்மறை மாதிரிகளின் மரபணு வரிசைமுறையை நடத்துவதுடன், அடுத்த இரு வாரங்களுக்கு மருத்துவமனையில் சோ்க்கும் நோயாளிகளின் போக்குகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், நோய் அறிகுறிகள் உள்ளவா்களை மையமாக வைத்து செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அனில் பய்ஜால் தலைமையில் நடைபெற்ற டிடிஎம்ஏ கூட்டத்தில் முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மற்றும் உயரதிகாரிகள் மற்றும் நிபுணா்களும் கலந்துகொண்டனா். அனைத்து ஏஜென்சிகளும் விழிப்புடன் இருக்குமாறும், நிலைமையைச் சமாளிக்க ஒருங்கிணைந்து செயல்படுமாறும் துணை நிலை ஆளுநா் கேட்டுக் கொண்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.