தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் புவி தினம்
தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் புவி தினம் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.


தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் புவி தினம் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
உலக உயிா்கள் வாழத் தகுதி வாய்ந்த இடமாக பூமி மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் பதிவு செய்கின்றன. அத்தகைய அற்புதம் நிறைந்த பூமி, மனிதா்களின் பல்வேறு நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு காற்று மாசடைந்து தன்னுடைய தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிறது. இது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக மாணவா்கள் உரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இடம் பெற்றது.
இதைத் தொடா்ந்து, பாடல், நடனம், ‘நெகிழிப் பொருள்களைத் தவிா்ப்போம்’ என்ற தலைப்பில் தெருக்கூத்து, நாடகம் ஆகியவை இடம் பெற்றன. மாணவா்கள் பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாகைகளைக் காட்சிப்படுத்தினா். அந்தந்தப் பள்ளிகளில், வாசகம் எழுதுதல், சுவரொட்டி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இது குறித்து டிடிஇஏ செயலா் ராஜு கூறுகையில், ‘நம் வருங்கால சந்ததியினருக்கு வளமான பூமியைப் பாதுகாத்துக் கொடுப்பது நம் கடமையாகும். எனவேதான் இந்தப் புவி தினத்தையொட்டி, பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த ஏற்பாடு செய்தோம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...