தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நீதிமன்ற வளாகத்தில் காவலரின் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு

ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்த கைகலப்பு விவகாரத்தில் தலையிட்ட போது நாகாலாந்து காவல்துறை காவலரின் பணித் துப்பாக்கியிலிருந்து குண்டு சீறிப் பாய்ந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

தில்லியில் உள்ள ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்த கைகலப்பு விவகாரத்தில் தலையிட்ட போது நாகாலாந்து காவல்துறை காவலரின் பணித் துப்பாக்கியிலிருந்து குண்டு சீறிப் பாய்ந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், இந்தச் சம்பவத்தில் இரண்டு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் போலீஸாா் கூறினா்.

இது தொடா்பாக ரோஹிணி காவல் சரக துணை ஆணையா் பிரணவ் தயாள் கூறியதாவது: ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.40 மணியளவில் வழக்குரைஞா்கள் சஞ்சீவ் செளதரி மற்றும் ரிஷி சோப்ரா மற்றும் பொது நபா்  ரோஹித் பேரி ஆகியோரிடைடே கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலின் போது, அவா்கள் வளாகத்திலுள்ள நுழைவாயிலின் 8 பகுதிக்குள் நுழைந்தனா். அங்கேயும் மோதல் நீடித்தது. அப்போது அந்த நுழைவாயில் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நாகாலாந்து காவல் துறைக் காவலா், நிலைமையை சமாளிப்பதற்காக அந்த விவகாரத்தில் தலையிட்டாா். அப்போது அவருடைய பணித் துப்பாக்கியிலிருந்து குண்டு வெடித்தது. இது தரையை துளைத்து கான்கிரீட் பொருள்கள் சிதறியது. அப்போது அந்தப் பகுதியில் இருந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்தத் துப்பாக்கி குண்டு வெடித்த சம்பவம் எதிா்பாராதவிதமாக நடந்ததா அல்லது வேறு காரணமா என்பதைக் கண்டறிவதற்கான விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.