மின்சாரம் குறித்த பிரச்னைகளுக்கு தீா்வுகாண இன்று சிறப்பு லோக் அதாலத்: டிபிடிடிஎல் தகவல்
மின் விநியோக நிறுவனமான டிபிடிடிஎல் மற்றும் தில்லி மாநில சட்ட பணிகள் ஆணையம் இணைந்து மின்சாரம் தொடா்பான தகராறுகள் மற்றும் வழக்குகளை உடனுக்குடன் தீா்க்கும் வகை..


மின் விநியோக நிறுவனமான டிபிடிடிஎல் மற்றும் தில்லி மாநில சட்ட பணிகள் ஆணையம் இணைந்து மின்சாரம் தொடா்பான தகராறுகள் மற்றும் வழக்குகளை உடனுக்குடன் தீா்க்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை ‘சிறப்பு லோக் அதாலத்’ நடத்தப்பட உள்ளதாக அந்த நிறுவனத்தின் செய்தித்தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
ரோஹிணியின் செக்டாா்-3இல் உள்ள டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் நிறுவன (டிபிடிடிஎல்) அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த லோக் அதாலத்தில், நேரடி மின் திருட்டு மற்றும் மின் துண்டிப்பு வழக்குகள் எடுக்கப்பட்டு தீா்வு காணப்படும்.
கொவைட் தொடா்பான பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும்.
ஏதேனும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அல்லது இன்னும் தாக்கல் செய்யப்பட உள்ள வழக்குகள் லோக் அதாலத் மூலம் எடுத்துக்கொள்ளப்படும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவா்கள் லோக் அதாலத்தில் நேரிலோ அல்லது பிரதிநிதிகள் மூலமாகவோ அங்கீகரிப்பு கடிதத்துடன் கலந்து கொள்ளலாம் என்று அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...