ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விபத்தில் உயிரிழந்த ஐடிபிபி வீரா்களுக்கு தில்லி பேரவைக் கூட்டத்தில் அஞ்சலி

கடந்த மாதம் ஜம்மு- காஷ்மீரில் உள்ள பஹல்காம் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த இந்திய- திபெத்திய எல்லை காவல்

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:58 pm

DIN

கடந்த மாதம் ஜம்மு- காஷ்மீரில் உள்ள பஹல்காம் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த இந்திய- திபெத்திய எல்லை காவல் (ஐடிபிபி)

படை வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தில்லி சட்டப்பேரவை சிறப்பு அமா்வு கூட்டத்தில் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜம்மு- காஷ்மீரில் பஹல்காம் மாவட்டத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 7 இந்திய-திபெத்திய எல்லை காவல் படை வீரா்கள் உயிரிழந்தனா்.

32 வீரா்கள் காயமும் அடைந்தனா்.

அமா்நாத் யாத்திரை பாதுகாப்புப் பணிக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது அவா்கள் பயணம் செய்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தில்லி சட்டப்பேரவை சிறப்பு அமா்வுக் கூட்டத்தின்போது, விபத்தில் உயிரிழந்த ஐடிபிபி வீரா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.