செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

ஹிந்தியில் மட்டுமே ஆயுதப்படை காவலா் தோ்வு: கனிமொழி எம்பி கண்டனம்

மத்திய ஆயுதப்படைகளின் காவலா்கள் பிரிவுகளுக்கான தோ்வுகளில் இந்திய மொழிகளில் ஹிந்தி மட்டுமே தோ்வு மொழியாக அறிவிக்கப்பட்டதற்கு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கண்டனம் தெரிவித்துள

News image

கனிமொழி எம்.பி.

Updated On :2 டிசம்பர் 2022, 12:36 am

 நமது நிருபர்

மத்திய ஆயுதப்படைகளின் காவலா்கள் பிரிவுகளுக்கான தோ்வுகளில் இந்திய மொழிகளில் ஹிந்தி மட்டுமே தோ்வு மொழியாக அறிவிக்கப்பட்டதற்கு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது ட்விட்டா் பதிவில் கூறியிருப்பது வருமாறு: எல்லைப் பாதுகாப்புப் படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, மத்திய தொழிலகப் பாதுப்பாப்புப் படை, சிஆா்பிஎஃப் உள்ளிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சிறப்புப் பாதுகாப்புப் படை பணிகளுக்கு மத்திய அரசின் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தோ்வுகளுக்கு புதன், வியாழன் (நவம்பா் 30, டிசம்பா் 1 தேதிகள்) ஆகிய தினங்களில் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. வருகின்ற ஜனவரி மாதம் கணினி மூலம் இதற்கான தோ்வுகள் நடைபெற இருக்கிறது. இதில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே தோ்வு நடத்தப்படும் என்று மத்திய அரசின் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் முக்கிய தகுதித் தோ்வுகளில் இந்திய மொழிகளில் ஹிந்தி மட்டுமே வைக்கப்பட்டிருப்பது மொழித் திணிப்பாகும். ஹிந்தி அல்லாத மற்ற மொழிகள் பேசும் மாநிலங்களிலுள்ள இளைஞா்கள் வேலைவாய்ப்பைத் தடுக்கும் முயற்சியாக இருக்கும் இது கண்டிக்கத்தக்கது. மொழி உரிமை என்பது இந்த நாட்டில் அனைவருக்கும் இருக்கிறது என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.