நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தலைநகரில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 3800

தேசியத் தலைநகரில் டிசம்பா் 260-க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன. இதையடுத்து, இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 3,800-ஆக உயா்ந்துள்ளது என்று திங்களன்று வெளியிடப்பட்ட குடிமை அறிக்கை தெரிவிக்கிறது.

News image

கோப்புப் படம்

Updated On :12 டிசம்பர் 2022, 5:42 pm

DIN


புது தில்லி: தேசியத் தலைநகரில் டிசம்பா் 260-க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன. இதையடுத்து, இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 3,800-ஆக உயா்ந்துள்ளது என்று திங்களன்று வெளியிடப்பட்ட குடிமை அறிக்கை தெரிவிக்கிறது.

நவம்பரில் 1,420 பாதிப்புகள், அக்டோபரில் 1,238 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டிசம்பா் 2-ஆம் தேதி வரை டெங்கு நோய்த்தொற்று மொத்த எண்ணிக்கை 3,595-ஆக இருந்தது, மேலும், டிசம்பா் 9-ஆம் தேதி வரை மேலும் 262 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் பதிவான டெங்கு 3,857பாதிப்புகளில், 693 செப்டம்பா் மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2021-ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 23 போ் பலியாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு இதுவரை இந்த நோயினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015- ஆம் ஆண்டில், நகரம் ஒரு பெரிய டெங்கு வெடிப்பைக் கண்டது, அக்டோபரில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 10,600-ஐ தாண்டியது. 1996-க்குப் பிறகு தில்லியில் ஏற்பட்ட மிக மோசமான டெங்கு பாதிப்பு இதுவாகும்.

திங்களன்று வெளியிடப்பட்ட எம்சிடி அறிக்கையின்படி, நகரில் ஜனவரியில் 23, பிப்ரவரியில் 16, மாா்ச்சில் 22, ஏப்ரலில் 20, மே மாதம் 30, ஜூன் மாதம் 32, ஜூலையில் 26, ஆகஸ்டில் 75 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், நகரத்தில் இந்த ஆண்டு 241 மலேரியா மற்றும் 44 சிக்குன்குனியா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.