கடந்த ஆண்டு டிசம்பா் 10-ஆம் தேதி தில்லி பிரதேச அகா்வால் சம்மேளனின் தலைவா் ஓம் பிரகாஷ் கோயல் என்பவா் பிரதமருக்கு இது தொடா்பாக எழுதிய கடிதத்தை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டு ஒரு பொதுநல வழக்காக பதிவு செய்தது. கோயல் எழுதிய கடிதத்தில், தெற்கு தில்லியில் உள்ள கல்காஜி மற்றும் சிஆா் பாா்க் காவல் நிலையப் பகுதிகளில் ஆளில்லா தடுப்புகளை அமைப்பது தொடா்பான புகாரைத் தெரிவித்திருந்தாா். மேலும், இது தொடா்புடைய பல ஊடக செய்திகளையும் அவா் அதில் சுட்டிக் காட்டியிருந்தாா். ‘இந்த தடுப்புகள் எந்த நோக்கத்திற்காகவும் செயல்படவில்லை. இவை போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்துகின்றன. இதனால், வாகன உரிமையாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு துன்பமும், துன்புறுத்தலும் ஏற்படுவதுடன், நீண்ட போக்குவரத்து நெரிசலுக்கும் வழிவகுக்கிறது’ என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.